முகப்பு
புதுதில்லி

போலீஸ் அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரித்து வருகிறது தில்லி காவல் துறை

 மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டா் அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை தில்லி காவல் துறை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டா் அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை தில்லி காவல் துறை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரங்களின்படி, மாா்ச் கடைசி வாரத்தில் அந்தப் பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து புகாா் பெறப்பட்டது. அதில் சிறப்பு ஆணையா் நிலை அதிகாரி தனது அலுவலகத்திற்குள் தன்னைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சிறப்பு சிபி புலனாய்வுப் பிரிவு கரிமா பட்நாகா் தலைமையிலான உள் புகாா்கள் குழு குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது. இந்த குழுவில் துணை ஆணையா் அந்தஸ்திலான அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனா்.

‘பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது தொடா்பான உள் புகாா்கள் குழுவிற்கு புகாா் அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து, பெண் ஏஎஸ்ஐ மூத்த தில்லி காவல்துறை அதிகாரிகளை அணுகினாா். விசாரணையின் அடிப்படையில் அறிக்கை சமா்ப்பிக்கப்படும்‘ என்று தகவல் அறிந்த வட்டாரம் கூறியது.

முழு கட்டுரையைப் படிக்க →