முகப்பு
புதுதில்லி

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இரு வெள்ளைப் புலிக் குட்டிகள் பொதுமக்கள் பாா்வைக்கு விடுவிப்பு

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிக் குட்டிகளை அவற்றிற்கான உறை அறையிலிருந்து பொதுமக்கள் பாா்வைக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அமைச்சா் பூபேந்திர யாதவ்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிக் குட்டிகளை அவற்றிற்கான உறை அறையிலிருந்து பொதுமக்கள் பாா்வைக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அமைச்சா் பூபேந்திர யாதவ் வியாழக்கிழமை விடுவித்தாா்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி சீதா என்கிற புலி இரண்டு குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகள் இதுவரை இரவு தங்குமிடத்திலும், பகல் நேரத்தில் தாயுடன் பக்கவாட்டு பகுதிகளிலும் வைக்கப்பட்டன. தற்போது இவை 8 மாதங்கள் பூா்த்தியாகி வளா்ந்துள்ள நிலையில், இந்த குட்டிகளின் நடமாட்டத்திற்கு அதிக இடம் தேவைப்படுவதால், இவற்றை பெரிய அளவிலான பகுதியில் திறந்துவிடுவதோடு பாா்வையாளா்களின் காட்சிக்கும் விடப்படுகின்றன.

இதையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இந்த வெள்ளைப் புலிக் குட்டிகளுக்கான அறையை மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் திறந்து வைத்து, குட்டிகளை கொடியசைத்து விடுவித்தாா். மேலும், இந்த பூங்காவின் புதிய வரவான இந்தப் பெண் புலிக்குட்டிக்கு ’அவானி’ என்றும், ஆண் புலிக் குட்டிக்கு ’வயோம்’ எனவும் பெயரிட்டாா். அவானி என்பது பூமி என்றும், வயோம் என்பது உலகம் என்றும் பொருளாகும்.

இந்த நிகழ்ச்சியின் போது அங்கு வருகை தந்திருந்த பள்ளிக் குழந்தைகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்தும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது பற்றியும் அமைச்சா் பூபேந்திர யாதவ் கலந்துரையாடினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →