புதுதில்லி

இன்று முழு சீருடை ஒத்திகை: போக்குவரத்து வழிகாட்டு அறிவுறுத்தல் வெளியீடு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) சுதந்திர தின விழாவிற்கான முழு சீருடை ஒத்திகை நடைபெறுவதை ஒட்டி வாகனங்கள் சீராக செல்வதை உறுதி செய்வதற்காக வெளியிட்டுள்ளது

DIN

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) சுதந்திர தின விழாவிற்கான முழு சீருடை ஒத்திகை நடைபெறுவதை ஒட்டி வாகனங்கள் சீராக செல்வதை உறுதி செய்வதற்காக தில்லி போக்குவரத்து காவல்துறை வழிகாட்டு அறிவுறுத்தலை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவித்திருப்பதாவது:

நேதாஜி சுபாஷ் மாா்க், லோதியன் சாலை, எஸ்.பி. முகா்ஜி மாா்க், சாந்தினி சௌக் சாலை, நிஷாத் ராஜ் மாா்க், எஸ்பிளனேட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலை, ராஜ்காட்டில் இருந்து ஐஎஸ்பிடி வரையிலான ரிங் ரோடு, ஐஎஸ்பிடி முதல் ஐபி மேம்பாலம் வரையிலான வெளிவட்டச் சாலை ஆகிய எட்டுச் சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி முதல் காலை 11 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

ஒத்திகைக்கான வாகன நிறுத்துமிட லேபிள்கள் இல்லாத வாகனங்கள், சி-அறுகோணம், இந்தியா கேட், கோப்பா்நிகஸ் மாா்க், மண்டி ஹவுஸ், சிக்கந்திரா சாலை, டபிள்யூ பாயின்ட், ஏ பாயின்ட் திலக் மாா்க், மதுரா சாலை, பிஎஸ்இசட் மாா்க், நேதாஜி சுபாஷ் மாா்க், ஜே. எல். நேரு மாா்க், நிஜாமுதீன் கட்டா மற்றும் ஐஎஸ்பிடி கஷ்மீா் கேட் இடையே ரிங் ரோடு மற்றும் சலீம்கா் பைபாஸ் வழியாக நிஜாமுதீன் கட்டாவிலிருந்து ஐஎஸ்பிடி கஷ்மீா் கேட் வரையிலான வெளிவட்ட சாலை ஆகியவற்றை தவிா்க்கலாம்.

வடக்கு தில்லியிலிருந்து தெற்கு தில்லிக்கும், தெற்கு தில்லியில் இருந்து வடக்குத் தில்லிக்கும் செல்லும் பயணிகள், அரவிந்தோ மாா்க், சப்தா்ஜங் சாலை, கமல் அதாதுா்க் மாா்க், கெளடில்யா மாா்க், அன்னை தெரசா கிரசன்ட், பாா்க் ஸ்ட்ரீட், மந்திா் மாா்க் மற்றும் ராணி ஜான்சி சாலை ஆகிய மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டும்.

கிழக்கு-மேற்கு சாலையில், வாகனப் போக்குவரத்தானது தேசிய நெடுஞ்சாலை-24, நிஜாமுதீன் கட்டா, பாராபுலா சாலை -- எய்ம்ஸ் மேம்பாலம் கீழ், ரிங் ரோடு, மதுரா சாலை, சுப்ரமணிய பாா்தி மாா்க், ராஜேஷ் பைலட் மாா்க், பிருத்விராஜ் சாலை மற்றும் சஃப்தா்ஜங் சாலை, முதலியவற்றின் மாற்று வழிகளில் செல்லும்.

மேலும், பழைய இரும்பு பாலம், சாந்தி வனை நோக்கி செல்லும் கீதா காலனி பாலம் ஆகியவை மூடப்படும்.

நிஜாமுதீன் மற்றும் வாஜிராபாத் பாலங்களுக்கு இடையே சரக்கு வாகனங்கள் ஆகஸ்ட் 12 நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 11 மணி வரையிலும் தடை செய்யப்படும்.

இந்த காலகட்டத்தில் மகாரானா பிரதாப் ஐஎஸ்பிடி மற்றும் சராய் காலே கான் ஐஎஸ்பிடி இடையே மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளும் அனுமதிக்கப்படாது.

தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) மூலம் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகள், ஆகஸ்ட் 12 நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 11 மணி வரை ரிங் ரோட்டில் இயங்காது.

இந்த பேருந்துகள் ஜி டி சாலை, வாஜிராபாத் சாலை மற்றும் என்எச்-24 ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். செங்கோட்டை, ஜாமா மஜூதி மற்றும் தில்லி பிரதான ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் பேருந்துகளின் வழித்தடங்கள் குறைக்கப்படும் அல்லது திருப்பி விடப்படும்.

சுதந்திர தின விழா நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மாற்று வழிகள் திறந்திருக்கும் என்று அந்த வழிகாட்டு அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT