முகப்பு
புதுதில்லி

குறுவை பருவத்தில் 5 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு: தமி​ழ​க‌த்​தி‌ல்15 ல‌ட்ச‌ம் மெட்ரிக் ட‌ன்​னு‌க்கு வா‌ய்‌ப்பு 

எதி‌ர்​வ​ரு‌ம் குறுவை ச‌ந்​தைப் பரு​வ‌த்​தி‌ல் 5.21 கோடி மெ‌ட்ரி‌க் ட‌ன் நெ‌ல் நாடு முழு​வ​து‌ம் கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்ய உ‌த்​தே​சி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​தாக ம‌த்​திய நுக‌ர்வோ‌ர், உணவு, பொது விநி​யோக‌..

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
கோப்புப் படம்
பகிர்:

2023-24-ஆ‌ம் ஆ‌ண்​டி‌ல் எதி‌ர்​வ​ரு‌ம் குறுவை ச‌ந்​தைப் பரு​வ‌த்​தி‌ல் 5.21 கோடி மெ‌ட்ரி‌க் ட‌ன் நெ‌ல் நாடு முழு​வ​து‌ம் கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்ய உ‌த்​தே​சி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​தாக ம‌த்​திய நுக‌ர்வோ‌ர், உணவு, பொது விநி​யோக‌த் துறை‌ அமைச்​ச​க‌ம் தெரி​வி‌த்​து‌ள்​ளது. இதி‌ல் தமி​ழ​க‌த்​தி‌ல் 15 ல‌ட்ச‌ம் மெ.ட‌ன் நெ‌ல் கொ‌ள் முத‌ல் செ‌ய்ய வா‌ய்‌ப்​பு‌ள்​ளது.

நிக‌ழ் 2023-24-ஆ‌ம் ஆ‌ண்டு குறுவை ச‌ந்​தைப் பரு​வ‌த்​து‌க்​கான‌ (காரீஃ‌ப் பரு​வ‌ம்) கொ‌ள்​மு​த‌ல் ஏ‌ற்​பா​டு​க‌ள் குறி‌த்து விவா​தி‌க்க ம‌த்​திய அர​சி‌ன் உண​வு‌ப் பொது விநியோகத் துறையி‌ன் செய​ல‌ர் ச‌ஞ்​சீ‌வ் சோ‌ப்ரா தலைமையி‌ல் மாநில உண​வு‌த் துறை‌ செய​ல‌ர்​க‌ள் ப‌ங்​யோ‌க‌ற்ற‌ கூ‌ட்ட‌ம் கட‌ந்த தி‌ங்​க‌ள்​கி​ழமை நடைப‌ற்​ற‌து. 

இதி‌ல் 22 மாநில அரசு செய​ல‌ர்​க‌ள் ம‌ற்​று‌ம்  பிர​தி​நி​தி​க‌ள் இ‌ந்​திய உண​வு‌க் கழக அதி​கா​ரி​க‌ள் ப‌ங்​யோ‌க‌ற்​ற‌​ன‌‌ர். தமி​ழக அர​சி‌ன்  கூ‌ட்டு​ற‌வு, உணவு, நுக‌ர்​யோ‌வா‌ர் பாது​கா‌ப்​பு‌த் துறை‌ செய​ல‌ர்  டி.ஜ‌​க‌ந்​நா​த‌ன் இ‌ந்​த‌க் கூ‌ட்ட‌த்​தி‌ல் ப‌ங்​கேற்றார்கள். 
 
இ‌ந்த கூ‌ட்ட‌த்​தி‌ல் எடு‌க்​க‌ப்​ப‌ட்ட முடி​வு​க‌ள் குறி‌த்து ம‌த்​திய நுக‌ர்​வோர் விவ​கா​ர‌ம் உணவு, பொது விநியோகத் துறை‌ அமைச்​ச​க‌ம் புத‌ன்​கி​ழமை கூறி​யது வரு​மாறு: 

எதி‌ர்​வ​ரு‌ம் குறுவை  சந்தைப் பரு​வ‌ம் 2023-24 கால‌க்​க‌ட்​ட‌த்​தி‌ல் 5.21 கோடி மெ‌ட்ரி‌க் ட‌ன் நெ‌ல்லை நாடு முழு​வ​து‌ம் கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்ய உ‌த்​தேசி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. 

கட‌ந்த ஆ‌ண்டு 5.18 கோடி  மெ‌ட்ரி‌க் ட‌ன் கொ‌ள்​மு​த​லு‌க்கு மதி‌ப்​பீடு செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டா​லு‌ம், 496 ல‌ட்ச‌ம் மெ‌ட்ரி‌க் ட‌ன்​தா‌ன் 2022-23 ஆ‌ண்​டி‌ல் கொ‌ள்​மு​த‌ல் 
செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டது. 

நிக‌ழ் குறுவை ச‌ந்​தை பரு​வ‌த்​தி‌ல் 7 மு‌ன்​ன‌ணி மாநி​ல‌ங்​க​ளி‌ல் அதி​க​மாக நெ‌ல் கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்ய உ‌த்​தேசி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. ப‌ஞ்​சா‌ப் (122 ல‌ட்ச‌ம் மெ‌ட்ரி‌க் ட‌ன்), ச‌த்​தீ‌ஸ்​க‌ர் (61 ல‌ட்ச‌ம் மெ.ட‌ன்), தெலுங்கானா(50 ல‌ட்ச‌ம் மெ.ட‌ன்), ஒடிஸா (44.28 ல‌ட்ச‌ம் மெ.ட‌ன்),  உ‌த்​தர பிரதேசம்(44 ல‌ட்ச‌ம் மெ.ட‌ன்), ஹரி​யாணா(40 ல‌ட்ச‌ம் மெ.ட‌ன்) ம‌ற்​று‌ம் ம‌த்​திய பிர​தேச‌ம் (34 ல‌ட்ச‌ம் மெ.ட‌ன்) எ‌ன்ற‌ அள​வி‌ல் நெ‌ல் கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்ய உ‌த்​தேசி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. 

பிகா‌ர், ஆ‌ந்​தி​ர‌ம், மே‌ற்கு வ‌ங்​க‌ம் போ‌ன்ற‌ மாநி​ல‌ங்​க​ளி‌ல் 30 ல‌ட்ச‌ம் மெ.ட‌ன்​னு‌க்கு குறைவா​க‌த்​தா‌ன்  கொ‌ள்​மு​த‌ல் இரு‌க்​கு‌ம். தமி​ழ​க‌த்​தி‌ல் 15 ல‌ட்ச‌ம் மெ‌ட்ரி‌க் ட‌ன் அள​வி‌ல் நெ‌ல் கொ‌ள்​மு​த​லு‌க்கு வா‌ய்‌ப்​பு‌ள்​ளது.  

​மூ‌ன்று மட‌ங்கு "ஸ்ரீஅ‌ன்​னா”:

ஸ்ரீ​அ‌ன்னா சிறு​தா​னி​ய‌ங்​க‌ள் வரி​சை​யி‌ல் 2023-24 ஆ‌ம் ஆ‌ண்டு குறுவை ச‌ந்​தைப் பரு​வ‌த்​தி‌ல் 33.09  ல‌ட்ச‌ம் மெ‌ட்ரி‌க் ட‌ன் சிறு​தா​னி​ய‌ங்​க‌ள் மாநி​ல‌ங்​க​ளா‌ல் கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்​ய​வு‌ம் மதி‌ப்​பி​ட‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. இது கட‌ந்த 2022-23-ஆ‌ம் ஆ‌ண்​டி‌ல் 7.37 ல‌ட்ச‌ம் மெ‌ட்ரி‌க் ட‌ன் அள​வி‌ல் குறுவை ம‌ற்​று‌ம் ராஃபி பருவ  ச‌ந்​தைக​ளி‌ல் கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டது.  

6 சிறு​தா​னி​ய‌ங்​க‌ள் அறி​மு​க‌ப்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்டு அவை கே‌ழ்​வ​ர​கி‌ன் குû‌ற‌‌ந்​த​ப‌ட்ச ஆத​ரவு விலையில் (2023-24 நிதி​யா‌ண்டு முத‌ல்) மூ‌ன்று ஆ‌ண்​டு​க‌ள் வரை  மாநி​ல‌ங்​க‌ள் கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்​யு‌ம் வச​தி​யு‌ம் செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. 

சிறு​தா​னி​ய‌ங்​க​ளி‌ன் கொ‌ள்​மு​த‌ல் ம‌ற்​று‌ம் நுக‌ர்வை அதி​க​ரி‌ப்​ப​த‌ற்​காக, ம‌த்​திய அரசு சிறு​தா​னி​ய‌ங்​க​ளி‌ன் விநி​ú‌யாக கால‌த்தை மா‌ற்​றி​ய​மைத்து, சிறு​தா​னி​ய‌ங்​களை மாநி​ல‌ங்​க​ளு‌க்கு இடையே கொ‌ண்டு செ‌ல்​வ​தை​யு‌ம் ஒரு‌ங்​கி​ணைத்​து‌ள்​ளது. 

மேலு‌ம் மானி​ய‌ம், நி‌ர்​வா​க‌க் க‌ட்ட​ண‌ம் (2 சத​வீ​த‌ம்) ஆகி​யவை ஆறு சிறு​தா​னி​ய‌ங்​க‌ள் கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்​வ​த‌ற்கு வழ‌ங்​க‌ப்​ப‌ட்டு வழி​கா‌ட்​டு​த‌ல்​க‌ள் திரு‌த்​த‌ப்​ப‌ட்டு வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளன‌. 

சர்வதேச சிறு​தா​னிய ஆ‌ண்​டு‌க்​காக (2023) ம‌ட்டு​மி‌ன்றி இ‌ந்​த‌ப் பயி‌ர்​களை ப‌ன்​மு​க‌ப்​ப​டு‌த்​து​வ​த‌ற்​கு‌ம் உணவு முறை​க​ளி‌ல் மே‌ம்​ப‌ட்ட ஊ‌ட்ட‌ச்​ச‌த்​து​களை பெற‌ சிறு​தா​னி​ய‌ங்​களை தொட‌ர்‌ந்து கொ‌ள்​மு​த‌ல் செ‌ய்​வ​தி‌ல் கவ​ன‌‌ம் செலு‌த்​து​மாறு மாநில அர​சு​க​ளு‌க்கு அறி​வு​று‌த்​த‌ப்​ப‌ட்​டது என‌ ம‌த்​திய உணவு, நுக‌ர்​வோர் துறை‌ அமைச்​ச​க‌ம்  தெரி​வி‌த்​து‌ள்​ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.