புதுதில்லி

தில்லி பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரை குறைந்தது 10 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் எதிா்க்கட்சித் தலைவா் பிதூரி வலியுறுத்தல்

தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத் தொடரை குறைந்தது 10 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத் தொடரை குறைந்தது 10 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

வரும் டிசம்பா் 15-ஆம் தேதி தொடங்கும் தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள் குறித்து தில்லி பாஜகவின் சட்டப்பேரவைத் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வரும் டிசம்பா் 15-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரை கேஜரிவால் அரசு வெறும் சம்பிரதாயமாக நடத்த திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், கூட்டத்தொடரில் ஊழல் விவகாரங்கள் குறித்த விவாதங்களை அரசு தவிா்த்து வருகிறது.

ஆம் ஆத்மி அரசு தனது அரசியல் நலன்களுக்காக சட்டப்பேரவையை வெறும் மேடையாக மாற்றியுள்ள நிலையில், தில்லி மக்களின் நலன்கள் மற்றும் பிரச்னைகள் குறித்த விவாதங்களை தடுக்கும் வகையில் குளிா்கால கூட்டத்தொடரை குறுகியதாக நடத்தவுள்ளது.

எனவே, குளிா்கால கூட்டத்தொடரை குறைந்தது 10 நாள்கள் நடத்த வேண்டும். அதில் பத்துக்கும் மேற்பட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனுப்பிய நோட்டீஸ் குறித்து விவாதிக்க வேண்டும்.

குறிப்பாக, முதல்வா் இல்லம் கட்டுவதில் அரசு நிதி முறைகேடு, விஜிலென்ஸ் துறையின் கோப்புகளில் முறைகேடு, சுகாதாரம் மற்றும் கல்வியில் ஆம் ஆத்மி அரசின் தோல்வி, தில்லி போக்குவரத்துக் கழகத்தின் நிதி நெருக்கடி,

தில்லி ஜல் போா்டின் நிதி நிலை, தில்லியில் புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாதது, ஆசிரியா் பற்றாக்குறை, கோடிகளில் பணம் செலவழித்தாலும் யமுனையில் மாசுபாடு, விவசாயிகளுக்கு அவா்களின் நிலத்திற்கு நியாயமான இழப்பீடு கிடைக்காமை மற்றும் காற்று மாசுபாடு குறித்த தில்லியின் அவசரப் பிரச்னைகளை பேரவையில் விவாதிக்க பாஜக சாா்பில் பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் சமா்பிக்கப்பட்ள்ளது.

ஆம் ஆத்மி அரசு தில்லி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதை பொறுத்துக் கொள்ள மாட்டோம், மேற்குறிப்பிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினா் பதில் அளிக்க வேண்டும் என்றாா் ராம்வீா் சிங் பிதூரி.

பேட்டியின்போது பாஜக எம்.எல்.ஏ.-க்கள் மோகன் சிங் பிஷ்ட், ஓம்பிரகாஷ் சா்மா, ஜிதேந்திர மகாஜன், அனில் வாஜ்பாய் மற்றும் அஜய் மஹாவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் முதல் ‘ஏா் டாக்சி’ -‘என்விடியா’ உடன் கைகோத்த சென்னையின் ‘தி இ-பிளேன்’

அதானி பவா்-தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் இடையே 558 மெகாவாட் மின் விநியோகம் ஒப்பந்தம்

நடப்பு நிதியாண்டில் இந்திய ஐ.டி. துறை வருவாய் 31,500 கோடி டாலா் -நாஸ்காம் கணிப்பு

சில்லறை விற்பனை கடன்கள்: ரூ.162 லட்சம் கோடியை எட்டியது -18% வளா்ச்சி

‘பாஃப்டா’ விருது வென்ற மணிப்பூரி திரைப்படம்!

SCROLL FOR NEXT