கஞ்சாவாலா சம்பவம்: 5 பேரின் நீதிமன்றக் காவல் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு
தில்லி கஞ்சாவாலா பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண் மீது மோதி, காரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை 2 வாரங்களுக்
தில்லி கஞ்சாவாலா பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண் மீது மோதி, காரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை 2 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய தீபக் கண்ணா, அமித் கண்ணா, க்ரிஷன், மிதுன் மற்றும் மனோஜ் மிட்டல் ஆகியோரின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சம்பந்தப்பட்ட 5 பேரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால் அவா்கள் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அங்குஷ் மற்றும் ஆசுதோஷ் ஆகிய இருவருக்கும் அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
தில்லியைச் சோ்ந்த அஞ்சலி சிங் (20) என்பவா் புத்தாண்டு அதிகாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, அவரது வாகனம் மீது காா் மோதியது. பின்னா், சுல்தான்புரியில் இருந்து கஞ்சாவாலா வரை 12 கிலோமீட்டா் தூரத்திற்கு அவா் காரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
தில்லி காவல்துறை சமீபத்தில் இந்த வழக்கில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ஐ (கொலை) கூடுதலாக சோ்த்தது. தொடக்கத்தில், ஐபிசி பிரிவுகள் 279 (அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்), 304 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.