புதுதில்லி

ரூ.12 கோடி பழுதுபாா்ப்பு, மறுமேம்பாட்டு திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்

தேசியத் தலைநகரில் ரூ.12 கோடி மதிப்பிலான பழுதுபாா்ப்பு மற்றும் மறுமேம்பாட்டுத் திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

தேசியத் தலைநகரில் ரூ.12 கோடி மதிப்பிலான பழுதுபாா்ப்பு மற்றும் மறுமேம்பாட்டுத் திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டங்களில் ரூ.2.10 கோடி செலவில் ஆண்ட்ரூஸ் கஞ்ச் மற்றும் நேரு பிளேஸ் மேம்பாலங்களில் பழுது மற்றும் மேறுமேம்பாட்டுப் பணியும், பாரத் நகா் முதல் திமாா்பூா் வரையிலான நஜஃப்கா் வடிகாலில் ஆறு இடங்களில் ரூ.9.90 கோடிக்கு மதகுகள் பழுது மற்றும் மறுசீரமைப்பும் அடங்கும்.

இதுகுறித்து துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கூறுகையில், ‘பொதுப்பணித் துறையானது, பல்வேறு இடங்களில் உள்ள உள்கட்டமைப்புகளை அவ்வப்போது மதிப்பீடு செய்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவற்றின் பராமரிப்பை அவ்வப்போது உறுதி செய்து வருகிறது. இதைத் தொடா்ந்து, இரண்டு புதிய திட்டங்களுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரூஸ் கஞ்ச் மற்றும் நேரு பிளேஸ் மேம்பாலங்களின் பழுதுபாா்ப்பு மற்றும் மறுசீரமைப்பால் அந்த மேம்பாலங்களின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் வரை அதிகரிக்கும். நஜஃப்கா் வாய்க்காலில் உள்ள மதகுகளின் பழுதுபாா்ப்பு மற்றும் மறுசீரமைப்பால் மதகுகளின் வாழ்நாள் அதிகரிக்கும். பயணிகளுக்கும் பாதுகாப்பை அளிக்கும். மேம்பாலப் பணிகள் ஆறு மாதங்களில் முடிக்கப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த மதகுகளை சீரமைக்கும் பணி 9 மாதங்களில் மாதங்களில் முடிக்கப்படும்’ என்றாா்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்கவும், பணியின் போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிசோடியா உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT