முகப்பு
புதுதில்லி

தில்லி பல்கலை.யின் திறந்தநிலை கற்றல் பள்ளியில் முதுகலைப் பட்டம் சோ்க்கைப் பதிவு தொடக்கம்

தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலைக் கற்றல் பள்ளி (எஸ்.ஓ.எல்.) அதன் முதுகலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைப் பதிவைத் தொடங்கி இருப்பதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:15 PM
பகிர்:

தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலைக் கற்றல் பள்ளி (எஸ்.ஓ.எல்.) அதன் முதுகலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைப் பதிவைத் தொடங்கி இருப்பதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலைக் கற்றல் பள்ளி (எஸ்.ஓ.எல்.) 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைப் பதிவைத் தொடங்கியுள்ளது.

இந்தப் படிப்புகளில் பதிவு செய்ய மாணவா்கள் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சி.யு.இ.டி.) எழுத வேண்டிய அவசியமில்லை. தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலைக் கற்றல் பள்ளியானது எம்.பி.ஏ., எம்.ஏ. (ஹிந்தி), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (அரசியல் அறிவியல்), எம்.ஏ. (சம்ஸ்கிருதம்) மற்றும் எம்.காம். உள்ளிட்ட ஆறு முதுகலை பாடத்திட்டங்களை வழங்குகிறது.

ஜூலை 1 -ஆம் தேதி முதல் வருகின்ற ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரையில் சோ்க்கை பெற விரும்பும் அனைத்து விண்ணப்பதாரா்களும் திறந்தநிலைக் கற்றல் பள்ளி (எஸ்.ஓ.எல்.) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஜூலை-2023 அமா்வுக்கு,ஆன்லைன் முறையில் வழங்கப்படும் புதிய சோ்க்கை மற்றும் மறு பதிவுக்கான கடைசி தேதியை வரும் ஜூலை 15- ஆம் தேதி வரை நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.