முகப்பு
புதுதில்லி

அரசு இ-சந்தை கொள்முதலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பிரத மர் நரேந்திர மோடி புதன்கிழமை பாராட்டு தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
பகிர்:

'ஜெம்' எனப்படும் அரசு இ-சந்தையில் அதிக கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பாராட்டு தெரிவித்தார்.

மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தனது ட்விட்டர் பதிவில், அரசின் இ-சந்தையில் சிறப்பாக செயல் பட்டவர்களின் சேவைகளை அங் கீகரிக்கும் வகையில், விற்பனையா ளர் வாங்குபவர் பெருமை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்று அதில் வெகுமதிகள், விருதுகள் அளிக்கப்பட்டன.

மத்திய மற்றும் மாநில அரசு களின் துறைகள், மக்கள் நலன் திட்டங்களுக்கான சரக்கு கொள் முதலுக்கு ஜெம் -ஐ அதிகளவில் பயன்படுத்தியதில் 2022-23 ஆம் ஆண்டில் மத்திய சுகாதாரம் மற் றும் குடும்ப நலத்துறை முதல் இடத்தை பெற்று விருதை பெற் றது என பியூஷ் கோயல் ட்விட்ட ரில் கருத்து தெரிவித்திருந்தார்.

வர்த்தக அமைச்சரின் ட்விட்டுக்கு பிரதமர்மோடி புதன்கிழமை பதிலளித்தார். அதில், 'அரசு இ-சந்தையில் சிறப்பாக செயல்பட்டவர்களின் பங்களிப்புக்கு பாராட்டுகள்.

இந்தியாவின் வளம் மற்றும் தற்சார்பு பயணத்திற்கு இத்தகைய முயற்சிகள் வலிமையூட்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜெம் என்கிற அரசின் இ- சந்தை மூலம் கடந்த 3 ஆண்டு களில் கொள்முதல் வளர்ச்சி 10 மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பொதுக் கொள்முதலில் வெளிப்படையான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. புதியதொழில்நுட்பங்கள் மூலம் கொள்முதல் நடைமுறையின் தனித்துவம் வாய்ந்த வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை 'ஜெம்' நனவாக்கியிருக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் துறைகள், மக்கள் நலன் திட்டங்களுக்கான சரக்கு கொள்முதலுக்கு ஜெம்-ஐ அதிகளவில் பயன்படுத்தியதன் வாயிலாக வரி செலுத்துவோரின் பணம் சேமிக்கப்பட்டிருக்கிறது. 2022-23 நிதியாண்டுக்கான ஒட்டு மொத்த சரக்கு கொள்முதல் ஏற்கனவே 2 லட்சம் கோடியை தாண்டியுள்ள நிலையில், இது மூன்று லட்சம் கோடி ரூபாயை தாண்டும்' என நம்பிக்கைத் தெரி வித்து மத்திய வர்த்தகம், தொழில், உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் (ஜெம் விருது வழங்கும் விழாவில்) அதில் குறிப்பிட்டிருந்தார். மத்திய வர்த்தகம் தொழில் துறையின் கீழ் அரசு இ-சந்தையான ஜெம்-ஐ கடந்த 2016 ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.