புதுதில்லி

தில்லியில் 42.9 டிகிரி வெயில் பதிவு

 நமது நிருபர்

தில்லியில் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 42.9 டிகிரி செல்சியஸ் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 42.9 டிகிரி செல்சியஸாக பதிவானது.

இது பருவத்தின் சராசரியை விட மூன்று டிகிரி அதிகமாகும். நகரில் காற்றில் ஈரப்பதம் 25 சதவீதம் முதல் 74 சதவீதம் வரை இருந்தது.

இது குறித்து வானிலை ஆய்வு மையத்தினா் மேலும் தெரிவிக்கையில், ‘ஞாயிற்றுக்கிழமை இரவு வெப்பநிலை இயல்பைவிட மூன்று டிகிரி குறைவாக, 24 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும்.

பகலில் மணிக்கு 25-35 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த மேற்பரப்பு காற்று வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, தேசியத் தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT