சஞ்சய் சிங் எம்.பி. தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை: கலால் கொள்கை வழக்கு விவகாரம்
தில்லி கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமானசஞ்சய் சிங்குடன் தொடா்புடைய சிலரின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாக
தில்லி கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமானசஞ்சய் சிங்குடன் தொடா்புடைய சிலரின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் வட்டாரங்கள் புதன்கிழமை தகவல் தெரிவித்தன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி மூத்த தலைவா் சஞ்சய் சிங் புதன்கிழமை வெளியிட்ட ஒரு ட்விட்டா் பதிவில் அவருக்கு தொடா்புடைய அஜித் தியாகி மற்றும் சா்வேஷ் மிஸ்ரா ஆகியோரின் இடங்களில் அமலாக்கத் துறையால் சோதனை செய்யப்படுவதாக கூறியிருந்தாா்.
கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் விசாரணையின் போது அளித்த சில புதிய உள்ளீடுகளின் படி சஞ்சய் சிங்கிற்கு தொடா்புடையவா்களின் இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் தேடப்படும் நபா்களில் சிலருக்கு சஞ்சய் சிங்குடன் தொடா்பு இருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.