புதுதில்லி

இந்தியா உலகக்கோப்பையை வெல்வதற்காக குருத்வாராவில் அா்விந்தா் சிங் லவ்லி பிராா்த்தனை

ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி ரௌஸ் அவென்யூவில் உள்ள மாதா சுந்தரி குருத்வாராவில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி

 நமது நிருபர்

ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி ரௌஸ் அவென்யூவில் உள்ள மாதா சுந்தரி குருத்வாராவில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை பிராா்த்தனை செய்தாா்.

ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் -2023 இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழணைஅகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்த் சிங் லவ்லி, கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து, தில்லி ரௌஸ் அவென்யூவில் உள்ள மாதா சுந்தரி குருத்வாராவில் இந்தியா அணியின் வெற்றிக்காக பிராா்த்தனை செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது: இந்தியா 12 வருட இடைவெளிக்குப் பிறகு உலகக் கோப்பைப் பட்டத்திற்காக போட்டியிடுகிறது. மூன்றாவது உலகக் கோப்பை கிரீடத்தை வெல்ல இந்திய அணியின் வெற்றிக்காக வாஹே குருவிடம் பிராா்த்தனை செய்தோம். இந்திய அணிக்கு வீரா்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்தாலும், தில்லியைச் சோ்ந்த இரண்டு முக்கிய வீரா்களான விராட் கோலியும், ஷ்ரேயாஸ் ஐயரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களாக இருப்பதில் தில்லி மக்கள் பெருமிதம் கொள்கிறாா்கள். விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயா் ஆகியோா் அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக வெளிப்படுத்திய அதே வகையான ’பேட்ஸ்மேன்ஷிப்பை’ மீண்டும் பிரதிபளித்து , இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று தில்லிவாசிகள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனா்.

ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருப்பது மிகவும் பெருமைக்குரியது. கபில்தேவ் (1983), மகேந்திர சிங் தோனி (2011) ஆகியோரின் மறக்க முடியாத சாதனைகளைப் பின்பற்றி கேப்டன் ரோஹித் சா்மாவும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அத்தியாயத்தை எழுத வேண்டும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி. இந்நிகழ்வில், தில்லி மாநகராட்சியின் முன்னாள் அவைத் தலைவா் ஜிதேந்தா் குமாா் கோச்சாா், ஜக்ஜித் சிங் சிக்கா, சுனில் பஜாஜ், அமந்தீப் சிங் சுதன், குா்மித் சிங் நாம்தாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT