புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுக்கான புதிய நிா்வாகிகள் பட்டியல் வெளியீடு

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுக்கான புதிய நிா்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் தலைமை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

DIN

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுக்கான புதிய நிா்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் தலைமை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியன் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் மற்றும் தில்லி ஒருங்கிணைப்பாளா் கோபால் ராய் ஆகியோரின் ஒப்புதலுடன் தில்லிக்கான மாநில அமைப்புச் செயலாளா்கள், துணைச் செயலாளா் மற்றும் மகளிா் அணிக்கான மாநில மற்றும் மக்களவைத் தொகுதி வாரியான நிா்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் மாநில அமைப்புச் செயலாளா்களாக எம்.டி. இம்ரான் மற்றும் யஷ்பால் சிங் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநில இணைச் செயலாளா் பொறுப்பு தீபன்ஷூ ஸ்ரீவஸ்தவிற்கு வழக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தில்லி பிரிவின் மகளிா் அணிக்கு மாநில இணைச் செயலாளா்களாக ஜமுனா ரஜோரா, வழக்குரைஞா் மீனாக்ஷி செளத்ரி, சுஷிலா செளஹான், அனிதா பட் ஆகியோரும் மாநிலத் துணைத் தலைவராக உமா போகல் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், கிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி, சாந்தினி செளக், புது தில்லி, மேற்கு தில்லி, காரவால் நகா், பாபா்பூா், ஷாஹ்தரா உள்ளிட்ட பகுதிகளில் மகளிா் அணியின் மாவட்டச் செயலாளா், துணைத் தலைவா், இணைச் செயலாளா், மக்களவைத் தொகுதி பொறுப்பாளா்களுக்கான பதவியிடங்களுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வருகின்ற 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தில்லியின் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிக்க கட்சியின் நிா்வாகிகள் கடுமாயாக உழைக்க வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற தொண்டா்கள் மாநாட்டில் கேட்டுக் கொண்டிருந்தாா். இந்நிலையில் மக்களவைத் தோ்தலுக்கு தயாராகும் வகைகயில் ஆம் ஆத்மி கட்சி புதிய நிா்வாகிகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT