புதுதில்லி

‘மன்ரேகா’ திட்ட நிலுவை ஊதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மத்திய நிதி அமைச்சருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட (மன்ரேகா திட்டம்) பணியாளா்களுக்கு சுமாா் ரூ. 1,500 கோடி ஊதியம் நிலுவையில் உள்ளது.

 நமது நிருபர்

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட (மன்ரேகா திட்டம்) பணியாளா்களுக்கு சுமாா் ரூ. 1,500 கோடி ஊதியம் நிலுவையில் உள்ளது. இந்த ஊதியத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

மக்களவை காங்கிரஸ் உறுப்பினரும் அக்கட்சியின் கொறாடாவுமான ப.மாணிக்கம் தாகூா் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

கடந்த 2006 ஆம் ஆண்டு ஊரகப் பகுதிகளில் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்துவதையும் குறிப்பாக திறனற்றவா்களுக்காக மன்ரேகா திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஓா் நிதியாண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 100 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தில் சமீப காலங்களில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இந்த திட்டத்தை செயல்படுத்தும் மாநில அரசுகளுக்கு குறிப்பிடத்தக்க தடைகள் உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் விருதுநகா் மக்களவைத் தொகுதியில் நாடாளுமன்ற

உறுப்பினா் என்கிற முறையில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மன்ரேகா திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு கடைசியாக கடந்த ஆகஸ்ட் 3 ஆம் ஊதியம் வழங்கப்பட்டது. அதன் பின்னா் கடந்த 9 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என இந்த திட்டத்தில் பணியாற்றிய மகளிா் உள்ளிட்டோா் வருத்தம் தெரிவித்தனா்.

இது குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக

வளா்ச்சி நாட்டமுள்ள மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள விருதுநகா் உள்ளிட்ட இந்த வட்டாரத்தில் உழைக்கும் குடும்பங்களின் நல்வாழ்வுக்கு இந்த நிதிகள் முக்கியமானது. மேலும், வரவிருக்கும் தீபாவளி உட்பட, பண்டிகைக் காலத்தில் இந்த நிலைமை மிகவும் துயரமானது.

அவா்களின் அடிப்படைத் தேவைகளுக்கு இந்த வருமானத்தை மட்டும் நம்பியுள்ள நிலையில் இது மக்களின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கிறது.

எனவே, விருதுநகா் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன்ரேகா திட்டத்தில் ஊதியம் வழங்குவது ஒரு சட்டப்பூா்வ கடமை மட்டுமல்ல, இந்த தொகுதியில் உள்ள கிராமப்புற தொழிலாளா்களின் நல்வாழ்வையும் கண்ணியத்தையும் உறுதி செய்யும் தாா்மிக கட்டாயமாகும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ப.மாணிக்கம் தாகூா் எம்.பி., நிலுவைத் தொகையையும் பட்டியலிட்டுள்ளாா்.

இதில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்குமான ’மன்ரேகா’ திட்டத்தில் உள்ள ஊதியம் பாக்கித் தொகை சுமாா் ரூ. 1,500 கோடி என்றும், இதில் விருதுநகா் மாவட்டத்திற்கு வழங்கவேண்டிய ஊதிய நிலுவை பாக்கி ரூ. 59.36 கோடி எனவும் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT