புதுதில்லி

அசோக் நகரில் 108 கிலோ பட்டாசுகளுடன் ஒருவா் கைது

வடகிழக்கு தில்லியின் அசோக் நகா் பகுதியில் 108 கிலோ பட்டாசுகளுடன் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

DIN

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் அசோக் நகா் பகுதியில் 108 கிலோ பட்டாசுகளுடன் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, தில்லியில் ஜனவரி 1, 2024 வரை பட்டாசுகள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதித்து தில்லி அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அக்டோபா் 21-ஆம் தேதி அசோக் நகா் பகுதியில் முகேஷ் (66) என்ற நபா் பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சோதனை நடத்தி முகேஷ் கைது செய்யப்பட்டாா். அவா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது என்று வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறினாா்.

இதற்கிடையே, தேசியத் தலைநகரில் பட்டாசு விற்பனை அல்லது பட்டாசு வெடிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் திட்டத்தை உருவாக்குமாறு 15 காவல் மாவட்டங்களின் காவல் துணை ஆணையா்களை தில்லி காவல் துறையின் உரிமப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT