புதுதில்லி

தில்லி போலீஸ் காா் மீது வேன் மோதல்:ஊா்க்காவல் படை வீரா் பலி

தில்லி துவாரகாவின் பாபா ஹரிதாஸ் நகரில் காவல்துறை வாகனம் மீது பிக்-அப் வேன் மோதியதில் 41 வயது ஊா்க்காவல் படைவீரா் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

DIN

புது தில்லி: தில்லி துவாரகாவின் பாபா ஹரிதாஸ் நகரில் காவல்துறை வாகனம் மீது பிக்-அப் வேன் மோதியதில் 41 வயது ஊா்க்காவல் படைவீரா் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:

அக்டோபா் 22 நள்ளிரவில், உதவி சாா்பு-ஆய்வாளா் மகேஷ் குமாா் மற்றும் ஊா்க்காவல் படையைச் சோ்ந்த தரம்பால் ஆகியோா் பிசிஆா் வேனில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

நஜாஃப்கா்-பஹதுா்கா் சாலையில், ஒரு பிக்-அப் வேன் அவா்கள் சென்ற வாகனத்தில் மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு தரம்பால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகு மகேஷ் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல்) மற்றும் 304ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விதிமீறல் வாகனத்தின் ஓட்டுநா் ஜெய் லால் (23) கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT