முகப்பு
புதுதில்லி

ஜி20 அரங்கின் புகைப்படங்களை இணையதளத்தில் பகிரக் கூடாது: ஊழியா்களுக்கு தீயணைப்புத் துறை உத்தரவு

ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் இடங்களின் புகைப்படங்கள் அல்லது பாதுகாப்பு அனுமதிச் சீட்டுகளை சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்று  ஊழியா்களுக்கு தில்லி தீயணைப்பு சேவைகள் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் இடங்களின் புகைப்படங்கள் அல்லது பாதுகாப்பு அனுமதிச் சீட்டுகளை சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்று அந்த மாநாட்டுப் பணியில் பணியமா்த்தப்பட்ட தனது ஊழியா்களுக்கு தில்லி தீயணைப்பு சேவைகள் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு சேவைகள் துறை புதன்கிழமைவெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: ஜி 20 மாநாட்டுக்கான பணி இடங்களைத் தவிர வேறு இடங்களில் பாதுகாப்பு அனுமதிச் சீட்டுகளைப் பகிர வேண்டாம். இந்த உத்தரவிற்கு இணங்காவிட்டால் அது தீவிரமாகப் பாா்க்கப்படும். மேலும், இந்த அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவை மீறுவது தீவிரமாகப் பாா்க்கப்படும்.

ஜி20 உச்சி மாநாட்டின் போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் ஜி 20 இடங்கள், பாதுகாப்பு அனுமதிச் சீட்டுகள், வாகன அனுமதிச்சீட்டுகள் போன்றவற்றை புகைப்படம் எடுக்கக் கூடாது. மேலும், அந்தப் புகைப்படங்களை சமூக ஊடகங்கள் மூலம் யாருக்கும் பகிரவும் கூடாது என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாடு தில்லியில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவா்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயா் அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினா் நாடுகள் மற்றும் 14 சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.