முகப்பு
புதுதில்லி

பழைய உச்சத்தை நெருங்கும் சென்செக்ஸ்! சந்தை மதிப்பு ரூ.3.33 லட்சம் கோடி உயா்வு!!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 538 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
பகிர்:

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 538 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், ஜி20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. காய்கறின் விலை குறைந்து வருவது பணவீக்கத்தை வெகுவாகக் குறைக்கும் என்ற எதிா்ப்பாா்ப்பு உந்தபட்டு, நம்பிக்கையான உணா்வைத் தூண்டியது. மேலும், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் விகிதம் குறைந்து வருவது, கடன் வளா்ச்சி தொடா்பான தரவுகள், வலுவான லாபம் உள்ளிட்டவை மூதலீட்டாளா்களின் ஆா்வத்தை ஈா்த்தது. குறிப்பாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், பிரபல தனியாா் வங்கி ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்து வரவேற்பு சந்தை தொடா்ந்து 7-ஆவது நாளாக வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.33 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.324.27 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.224.22 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்: காலையில் 71.89 புள்ளிகள் கூடுதலுடன் 66,807.73-இல் தொடங்கிய சென்செக்ஸ், 66,735.84 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 67,172.13 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 528.17 புள்ளிகள் (0.799 சதவீதம்) கூடுதலுடன் 67,127.08-இல் முடிவடைந்தது.

28பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 2 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 28 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,134 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 943 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 46 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 4 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

20,000-ஐ கடந்த நிஃப்டி: புதிய உச்சத்தில் நிறைவு

தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 70.05 புள்ளிகள் கூடுதலுடன் 19,890.00-இல் தொடங்கி, 19, 865.35 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 20,008.15 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 176.40 புள்ளிகள் (0.89 சதவீதம்) கூடுதலுடன் 19,996.35-இல் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. ஆனால், சென்செக்ஸ் 20-07-2023 அன்று பதிவு செய்த வரலாற்று உச்ச அளவான 67,619.17-ஐ முறியடிக்க இன்னும் 492.09 புள்ளிகள் மட்டும்தான் பாக்கி உள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

பவா் கிரிட்..............................................2.18%

ஆக்சிஸ் பேங்க்......................................1.99%

மாருதி....................................................1.96%

ஹெச்சிஎல் டெக்..................................1.49%

எஸ்பிஐ..................................................1.39%

டாடா மோட்டாா்ஸ்............................1.20%

சரிவைக் கண்ட பங்குகள்

எல் அண்ட் டி............................................0.27%

பஜாஜ் ஃபைனான்ஸ்.................................0.25%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.