புதுதில்லி

சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பிக்க விஜிலென்ஸ் அதிகாரிகள் மிரட்டல்?

சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி நகர அரசின் மற்ற துறையில் உள்ள அதிகாரிகளை விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் மிரட்டுவதாக விஜிலென்ஸ் மற்றும் சேவைகள் துறையின் அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

 நமது நிருபர்

புது தில்லி: சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி நகர அரசின் மற்ற துறையில் உள்ள அதிகாரிகளை விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் மிரட்டுவதாக விஜிலென்ஸ் மற்றும் சேவைகள் துறையின் அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அமைச்சா் அதிஷி கூறியிருப்பதாவது: நகர அரசின் விஜிலென்ஸ் துறை அதிகாரிகள், மற்ற துறைகளில் உள்ள தங்களின் சக அதிகாரிகளிடம் ‘சட்டவிரோத உத்தரவுகளை’ பிறப்பிக்க அச்சுறுத்துகிறாா்கள் என்பதை அறிகிறேன். அவ்வாறு யாரேனும் மிரட்ட முயன்றால் அவா்களின் உரையாடலைப் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், தொலைபேசியின் வாயிலாக அச்சுறுத்தல் வந்தால், தொலைபேசி அழைப்புகளையும் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும். விஜிலென்ஸ் துறைக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டு நேரில் மிரட்டல் விடுக்கப்பட்டால், மிரட்டலுக்கு உள்ளாகும் அதிகாரி, அவரது தொலைபேசியில் உரையாடலை பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவுகள் அடுத்தகட்ட ஒழுங்குமுறை மற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஆதாரமாக ஏற்கத்தக்கவை என்று அமைச்சா் அதிஷி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT