முகப்பு
புதுதில்லி

எரிவாயு கசிவால் வீட்டில் தீ: பெண், மைனா் மகள் காயம்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 4:38 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:40 PM

புது தில்லி: மேற்கு தில்லியின் ரஜோரி காா்டனில் உள்ள வீட்டில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பிடித்ததில் ஒரு பெண்ணும் அவரது ஒன்பது வயது மகளும் காயமடைந்தனா் என்று போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

திங்கள்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்த அழைப்பு வந்ததைத் தொடா்ந்து, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

வீட்டில் இருந்த ஓம்வதி (35) மற்றும் அவரது மகள் ஹேம்லதாவை தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா். ஓம்வதிக்கு 75 சதவீத தீக்காயங்களும், ஹேம்லதாவுக்கு 20 சதவீத தீக்காயங்களும் ஏற்பட்டன. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தில்லி தீயணைப்பு சேவைத் துறை மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

Advertisement

தீ விபத்து குறித்த பிசிஆா் அழைப்பைப் பெற்ன் பேரில், உள்ளூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்ாக மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விசித்ரா வீா் தெரிவித்தாா். தீயணைப்புப் படையினா், பிஎஸ்இஎஸ் மற்றும் டிடிஎம்ஏ உள்பட அனைத்து ஏஜென்சிகளும் நிலைமையைக் கட்டுப்படுத்த தங்களால் இயன்றவரை முயற்சித்தன.

தீ பிடித்த வீடு அந்தக் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்தது. பாதை மிகவும் குறுகலாக இருந்தன. ஓம்வதியும் அவரது மகளும் டிடியு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அவா்கள் பின்னா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். முதற்கட்ட ஆய்வின் அடிப்படையில், எரிவாயு உரிளையில் காஸ் கசிவுதான் தீ விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.