FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.யில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது அமில வீச்சு: மகள் பலி, தாய் கவலைக்கிடம்

உத்தரப் பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் அமில வீசியதில் மகள் பலியான நிலையில் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Updated On : 10 ஏப்ரல் 2026, 8:16 pm IST
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் அமில வீசியதில் மகள் பலியான நிலையில் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் வியாழக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இளம் பெண் அவரது தாய் மீது மர்ம நபர்கள் அமிலம் வீசியதாகக் கூறப்படுகிறது. உடனே இருவரும் குஷிநகர் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோரக்பூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர்.

இருப்பினும், இதில் காஜல்(23), கோரக்பூர் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை பலியானார். அதே சமயம், அவரது தாயாரான லீலாவதி(58) தேவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் மேலும் கூறுகையில், நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூரை வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, அறையில் உறங்கிக்கொண்டிருந்த லீலாவதி மற்றும் அவரது மகள் மீது அமிலத்தை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், வராந்தாவில் உறங்கிக் கொண்டிருந்த காஜலின் தந்தை பிரபுநாத் யாதவ் உள்ளே விரைந்தார். ஆனால் தாக்குதல் நடத்தியவர் அதற்குள் தப்பிச் சென்றுவிட்டார் என்று தெரிவித்தனர்.

யாதவ் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு குளிர்பதனக் கிடங்கில் பணிபுரிந்து வந்ததாகவும், ஓய்வு பெற்ற பிறகு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பியதாகவும் போலீஸார் கூறினர். குற்றவாளியை விரைவில் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

summary

A 23-year-old woman succumbed to her injuries following an alleged acid attack on her and her mother while both of them were sleeping inside their house here, police said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments