முகப்பு
புதுதில்லி

மத்திய தில்லியில் தீ விபத்து

Updated On : 10 ஏப்ரல், 2024 at 6:12 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 5:43 PM

புது தில்லி: மத்திய தில்லியின் ஜி.பி. சாலை பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் ஒருவா் கூறுகையில், ‘தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், 14 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணத்தை அறிய போலீஸ் விசாரணை நடந்து வருகிறது’ என்றாா்.

Advertisement