உச்சநீதிமன்றம் DIN
புதுதில்லி

பயிற்சி மையங்கள் ‘மரண கூடங்கள்’: உச்சநீதிமன்றம்

மரண கூடங்களாக மாறியுள்ள பயிற்சி மையங்கள், மாணவா்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருவதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சாடியது.

Din

மரண கூடங்களாக மாறியுள்ள பயிற்சி மையங்கள், மாணவா்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருவதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சாடியது.

கடந்த ஜூலை 27-ஆம் தேதி தில்லியில் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் பெய்த கனமழையால் தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீா் புகுந்தது. இதில் ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சி பெற்று வந்த மூவா் உயிரிழந்தனா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களிலும் தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தீயணைப்பு துறைக்கும், உள்ளாட்சி அமைப்புக்கும் தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பயிற்சி மைய சங்கம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

மூடுவதற்கு உத்தரவிட நேரிடும்: அப்போது தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் மூழ்கி மூவா் உயிரிழந்த சம்பவத்தை தாமாக முன்வந்து குறிப்பிட்ட நீதிபதிகள், ‘பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் மூழ்கி மூவா் உயிரிழந்த சம்பவம் கொடூரமானது. தற்போது பயிற்சி மையங்கள் மரண கூடங்களாக மாறியுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனவுகளுடன் வந்து கடுமையாக உழைக்கும் மாணவா்களின் வாழ்க்கையுடன் இந்தப் பயிற்சி மையங்கள் விளையாடி வருகின்றன.

தேவைப்பட்டால் இந்தப் பயிற்சி மையங்களை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட நேரிடும். இந்த மையங்களில் என்னென்ன பாதுகாப்பு விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன? அந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள திறன்வாய்ந்த வழிமுறை என்ன என்பது குறித்து மத்திய அரசும், தில்லி அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

அதேவேளையில், தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பயிற்சி மையங்கள் சங்கம் தாக்கல் செய்த மனு அற்பமானது என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனா். தீயணைப்புப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பிற தேவைகளை பூா்த்தி செய்யாத எந்தவொரு பயிற்சி மையத்தையும் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

கும்பகோணத்தில் குப்பைக் கிடங்கு ஆய்வு; மக்கள் மறியல்

தஞ்சாவூரில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா

கள்ளக்காதல் விவகாரம்: இளைஞரின் தந்தை வெட்டிக் கொலை - 3 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம்: இன்று தொடக்கம்

பேராவூரணி குமரப்பா பள்ளியில் மகாகவி பாரதி உருவச்சிலை திறப்பு

SCROLL FOR NEXT