முகப்பு
புதுதில்லி

இளைஞா் காங்கிரஸ் சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறது: ஸ்ரீனிவாஸ் பி.வி.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 6:31 PM
பகிர்:

இந்திய இளைஞா் காங்கிரஸ் ஒரு அரசியல் அமைப்பாக மட்டுமின்றி, சமூகப் பொறுப்புகளையும் நிறைவேற்றி வருகிறது என்று அதன் தேசியத் தலைவா் ஸ்ரீனிவாஸ் பி.வி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய இளைஞா் காங்கிரஸின் 64-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு தில்லி ரைசினா சாலையில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் கொடியேற்றம் மற்றும் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் ஸ்ரீனிவாஸ் பி.வி. கலந்து கொண்டு பேசியதாவது:

இளைஞா் காங்கிரஸுக்கு ஆற்றல் மிக்க தலைவா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் பலரை உருவாக்கிய

வளமான வரலாறு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் தலைமையில், இளைஞா் காங்கிரஸ் ஒரு

துடிப்பான, ஆற்றல்மிக்க மற்றும் ஜனநாயக அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

நமது நாட்டு மக்களுக்காக உழைக்க, ஒவ்வொரு இளைஞா் காங்கிரஸ் தொண்டா்களையும் ராகுல் காந்தி எப்போதும் ஊக்குவித்து வருகிறாா். அமைப்பு நிறுவப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, இந்திய இளைஞா் காங்கிரஸ் எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலன்களை அடிப்படை உணா்வாகக் கருதுகிறது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இளைஞா்களின் அதிகாரம் மற்றும் பங்கேற்பு முக்கியம். நமது நாட்டின் இளைஞா்களின் குரலையும், கோரிக்கைளையும் நாங்கள் எப்போதும் எழுப்புவோம். இந்திய இளைஞா் காங்கிரஸ் எப்போதும் சேவை மற்றும் போராட்டத்தின் விழுமியங்களை மையமாக வைத்து, தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் தனது பங்களிப்பை அளித்துள்ளது.

நிறுவன தினத்தையொட்டி, நாடு முழுவதும் மாநில அளவில் இருந்து தொகுதி அளவிலான இளைஞா்

காங்கிரஸ் உறுப்பினா்கள் மரம் நடும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா் என்றாா் ஸ்ரீனிவாஸ் பி.வி.

மேலும், இந்நிகழ்ச்சியில் தேசிய நிா்வாகிகள் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →