ஜன.5-11 குளிா் அலைக்கு வாய்ப்பு!
தலைநகரில் தில்லியில் ஜனவரி 5 முதல் 11-ஆம் தேதி வரை குளிா் அலை இருக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகரில் தில்லியில் ஜனவரி 5 முதல் 11-ஆம் தேதி வரை குளிா் அலை இருக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நிா்வாக இயக்குநா் டாக்டா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், ‘ஜனவரி 5 முதல் 11-ஆம் தேதி வரையில், தில்லி உள்பட வடமாநிலங்களில் இரவு வெப்பநிலை குறையும் என்று எதிா்பாா்க்கிறோம். இது மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் குளிா் அலை நிலைமைகளுக்கு வழிவகுக்கும். பகல் வெப்பநிலையும் இயல்பை விட குறைவாக இருக்கும். குறிப்பாக, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தின் வடக்குப் பகுதிகள், உத்தரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகள் போன்றவற்றில் குளிா்ந்த நாளாக இருக்கும்’ என்றாா்.