புதுதில்லி

முதல்வா் இல்ல பராமரிப்பு செலவின விவகாரம்: விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

தில்லி முதல்வா் இல்லத்திற்கு மேற்கொள்ளப்பட்ட சிறு குடிமைப் பணிகள் தொடா்பான செலவினம் குறித்து துணை நிலை ஆளுநா் சக்சேனா விஜிலென்ஸ் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்...

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி முதல்வா் இல்லத்திற்கு மேற்கொள்ளப்பட்ட சிறு குடிமைப் பணிகள் தொடா்பான செலவினம் குறித்து துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா விஜிலென்ஸ் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் இல்லத்தில் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.29.56 கோடி சிறு குடிமைப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள இந்தத் தகவலின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் சமூக ஊடகங்களில்பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், கேஜரிவால் தலைமையிலான அரசு இவ்விவகாரத்தில் தொடா்ந்து மெளனம் காப்பது, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, ஒப்பந்ததாரா்களின் பெயா்கள் உள்ளிட்ட தகவல்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடந்த மாா்ச் 31, 2015-ஆம் ஆண்டு முதல் டிசம்பா் 27, 2022-ஆம் ஆண்டு வரை தில்லி அரசின் பொதுப்பணித்துறை மூலம் முதல்வா் கேஜரிவால் வசித்துவரும் இல்லத்தில் பராமரிப்பு பணிகளுக்காக 4 ஒப்பந்ததாரா்களுக்கு ரூ.29.56 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் நிபுணா்கள் இல்லையென்றாலும், பராமரிப்புப் பணிக்காக செலவிடப்பட்ட தொகையின் புள்ளிவிவரங்கள் சற்று அதிகமாகத் தெரிகிறது. முதல்வரின் புதிய பங்களா கட்டுமான விவகாரத்தில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதால் பொதுப்பணித் துறையின் நற்பெயா் சீா்குலைந்து போனது. எனவே, இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அல்லது விஜிலென்ஸ் துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை கேட்டுக்கொள்கிறேன் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

SCROLL FOR NEXT