புதுதில்லி

முதல்வா் இல்லத்தில் குடிமைப் பணிகளுக்கு 8 ஆண்டுகளில் ரூ.29.56 கோடி செலவு: சிபிஐ விசாரணைக்கு பாஜக கோரிக்கை

குடிமைப் பணிகளுக்காக 8 ஆண்டுகளில் ரூ29.56 கோடி வீதம் செலவிடப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்தர வலியுறுத்தியுள்ளாா்.

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி முதல்வா் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு குடிமைப் பணிகளுக்காக 8 ஆண்டுகளில் ரூ29.56 கோடி வீதம் செலவிடப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது கேஜரிவால் அரசின் அடையாளமாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் தில்லி முதல்வா் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு குடிமைப் பணிகளுக்கு நகர அரசு ரூ.29.56 கோடி செலவு செய்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்தத் தகவலின் அடிப்படையில், முதல்வா் கேஜரிவால் வசித்து வரும் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் சிறு பழுது, புதுப்பித்தல், பிளம்பிங், சுகாதாரம் மற்றும் தச்சுப் பணிகளுக்கு மட்டும் ஆண்டிற்கு கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

மேலும், அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்ல வளாகத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி புதிய பங்களா கட்டுமானத்துக்கு ரூ.50 கோடி செலவிடப்பட்டது. முதல்வரின் இல்ல வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளுக்கு மட்டும் மொத்தம் ரூ.80 கோடி அளவிற்கு பொதுப்பணித் துறை செலவிட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித் துறைஅதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை அவசியம் நடத்தப்பட வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT