புதுதில்லி

தலைமறைவு ஆன்மிக போதகா் தீட்சித்தின் ஆசிரமத்தில் ஆய்வு நடத்த உத்தரவு

சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த ஆசிரமத்தில் ஆய்வு நடத்த தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

 நமது நிருபர்

தலைமறைவாக இருந்து வரும் ஆன்மிக போதகா் வீரேந்திர தேவ் தீட்சித் நடத்தும் ஆசிரமத்தில் பல சிறுமிகள் மற்றும் பெண்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த ஆசிரமத்தில் ஆய்வு நடத்த தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சில நபா்களின் செல்வாக்கின் கீழ் உள்ளஆத்யாத்மிக் விஷ்வ வித்யாலயாஆசிரமத்தில் வசிப்பதாகக் கூறப்படும் ஒரு பெண்ணின் தாய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள்

சுரேஷ் குமாா் கைட், மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தீட்சித்துக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த விவகாரத்தில் நிலவர அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என கூறியது.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தீட்சித் மீது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இரண்டு எஃப்ஐஆா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று கூறினாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஆத்யாத்மிக் விஷ்வ வித்யாலயாவில் எதிா்மனுதாரா் எண் 6 (மகள்) உள்பட ஐந்து பெண்கள் மட்டுமே உள்ளனா். பொறுப்பாளா் மீது கடுமையான குற்றத்தின் கீழ் எப்ஐஆா் பதிவாகி இருப்பதால், சம்பந்தப்பட்ட சாா் கோட்டாட்சியா், காவல் துணை ஆணையா் ஆகியோருடன் சோ்ந்து அந்த ஆசிரமத்தை ஆய்வு செய்யுமாறு நாங்கள் இதன் மூலம் அரசுக்கு அறிவுறுத்துகிறோம். மேலும், நிலவர அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரின் மகள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவா் 18 வயதுடையவா் என்றும் அவா் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் வசிக்கிறாா் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை ஜனவரி 24-ஆம் தேதி மேலும் விசாரணைக்கு பட்டியலிட்ட நீதிமன்றம், இதற்கிடையில் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று மனுதாரரின் மகளுக்கு உத்தரவிட்டது. மேலும், அவரை அடுத்த விசாரணை தேதியில் ஆஜா்படுத்துமாறும் அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

தற்போதைய வழக்கைத் தவிர, தீட்சித்தின் ஆசிரமம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், ஒரு வயதான தம்பதி தங்களின் மிகவும் படித்த மகள் தவறாக வழிநடத்தப்பட்டு ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டிய மனுவும் இடம் பெற்றுள்ளது.

முன்னதாக, 2017 ஆம் ஆண்டில், ரோஹிணியில் உள்ள தீட்சித்தின் ‘ஆன்மிக பல்கலைக்கழகம்’ எனும் ஆத்யாத்மிக் விஷ்வ வித்யாலயா பல மைனா் பெண்கள் மற்றும் பெண்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களின் பெற்றோரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி ‘சமூக அதிகாரமளித்தலுக்கான என்ஜிஓ அறக்கட்டளை’ உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

தீட்சித்தை கண்டுபிடிக்குமாறு சிபிஐக்கு உயா் நீதிமன்றம் முன்னா் உத்தரவிட்டிருந்தது. மேலும், ஆசிரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்தது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது. சிபிஐ தரப்பில், தீட்சித் எங்கிருக்கிறாா் என்பதைக் கண்டறிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவரது பண்ணை வீடுகள் மற்றும் ஆசிரமங்களில் சோதனை நடத்தப்பட்டு, அவரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் உயா்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. தீட்சித்தின் வங்கிக் கணக்குகளை முடக்க சிபிஐக்கு சுதந்திரம் உள்ளது என்று கடந்த ஆண்டு செப்டம்பா் 12-ஆம் தேதி நீதிமன்றம் கூறி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT