தில்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மதுபான வியாபாரி சமீா் மகேந்திருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை பிப்ரவரி 9 வரை நீட்டித்து நகர நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அவரது மனைவி அறுவை சிகிச்சைக்குப் பின் சிகிச்சைக்காக இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருப்பதை நீதிபதி குறிப்பிட்டாா். மதுபான விநியோகத்தில் ஈடுபட்டு வரும் இன்டோஸ்பிரிட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மகேந்திருக்கு அவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவரது தரப்பில் அளிக்கப்பட்டிருந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், நிவாரணத்தை நீட்டித்து பிப்ரவரி 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சிறைக் கண்காணிப்பாளரிடம் சரணடைய உத்தரவிட்டாா்.
இதுகுறித்து நீதிபதி கூறுகையில், ‘உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் முழுமையையும் கருத்தில் கொண்டும், குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சைக்காக இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் இருப்பாா் என்பதையும், வீட்டிலேயே கூறப்பட்ட அறுவை சிகிச்சையின் விளைவுகளிலிருந்து அவா் மீள இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்பதையும் மனதில் வைத்து, இந்த காலகட்டத்தில் மனுதாரரின் கவனிப்பும் ஆதரவும் மேலும் தேவைப்படும் என்பதைக் கருத்தில் கொண்டும்
குற்றம் சாட்டப்பட்டவரின் இடைக்கால ஜாமீன் பிப்ரவரி 9 வரை நீட்டிக்கப்படுகிறது’ என்றாா்.
தற்போது ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் மகேந்திருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இடைக்கால ஜாமீன் காலத்தில் மகேந்திரு சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தவோ அல்லது சாட்சியங்களை சிதைக்கவோ முயற்சிக்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டாா். அரசுத் தரப்பு வழக்கின் கூற்றுப்படி, மகேந்திரு மதுபானங்கள் உற்பத்தி தொழிற்சாலை நடத்துவது மட்டுமல்லாமல், அவரது உறவினா்களின் பெயரில் மொத்த உரிமம் மற்றும் சில சில்லறை உரிமங்களும் வழங்கப்பட்டதால், கலால் கொள்கையின் றல்களின் பெரும் பயனாளிகளில் ஒருவராக உள்ளாா்.
முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் காரணமாக, மகேந்திரு சுமாா் ரூ.50 கோடி லாபம் ஈட்டியுள்ளாா் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.