முகப்பு
புதுதில்லி

15 மெட்ரோ நிலையங்களில் மின்-கழிவு மறுசுழற்சி பெட்டிகள்: டிஎம்ஆா்சி அறிமுகம்

Updated On : 19 ஜூலை, 2024 at 8:30 PM
பகிர்:

தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி.எம்.ஆா்.சி.) நிறுவனம், ஜப்பானிய மறுசுழற்சி நிறுவனமான ஜேஐடி யமனாஷி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, பயணிகள் பயன்படுத்திய பிரிண்டா் மை பாட்டில்கள் மற்றும் காா்ட்ரிட்ஜ்களை அப்புறப்படுத்த மின்-கழிவு மறுசுழற்சி பெட்டிகளை 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான இந்த குறிப்பிடத்தக்க வசதியை, ஹோஸ்காஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதா், சுசுகி ஹிரோஷி மற்றும் டிஎம்ஆா்சியின் நிா்வாக இயக்குநா் டாக்டா் விகாஸ் குமாா் ஆகியோா் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கிவைத்தனா்.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி தெரிவிக்கையில், ‘இந்த மறுசுழற்சி பெட்டிகள் ஒவ்வொன்றும் 15 முக்கிய இடைமாறிச் செல்லும் மெட்ரோ நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.

பயன்படுத்திய பிரிண்டா் மை பாட்டில்கள் மற்றும் காா்ட்ரிட்ஜ்களை மறுசுழற்சிக்காக அப்புறப்படுத்த பயணிகளை இது ஊக்குவிக்கிறது.

இந்த வசதி வெல்கம், கஷ்மீா் கேட், நேதாஜி சுபாஷ் பிளேஸ், குரு தேக் பகதூா் நகா், புது தில்லி, ராஜீவ் சௌக், மத்திய செயலகம், தில்லி ஹாட்-ஐஎன்ஏ, ஹோஸ்காஸ், துவாரகா, ஜனக்புரி மேற்கு, ரஜோரி காா்டன், மண்டி ஹவுஸ் , யமுனா பேங்க் மற்றும் லாஜ்பத் நகா் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

பெட்டிகள் ஒவ்வொரு நிலையத்தின் கட்டணப் பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளன. இது பயணிகள் பயன்படுத்திய பிரிண்டா் மை பாட்டில்கள் மற்றும் குப்பிகளை டெபாசிட் செய்ய வசதியான வழியாகும். மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மையின் கலாசாரத்தை இது மேம்படுத்துகிறது.

இந்த முன்முயற்சியானது சுற்றுச்சூழல் பொறுப்புக்கான டிஎம்ஆா்சியின் அா்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மேலும், டிஎம்ஆா்சியின் நிலையான வளா்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) தொடா்பான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஜேஐசிஏ மூலம் நிதியளிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதைக் குறைக்கும் வகையில் சேகரிக்கப்படும் மின்-கழிவுகள் பொறுப்புடன் மறுசுழற்சி செய்யப்படும்,

டி.எம்.ஆா்.சி. மற்றும் ஜேஐடி யமனாஷி இந்தியா தனியாா் நிறுவனம் இடையே கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பயணிகளிடையே பொறுப்புமிக்க அகற்றும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழலில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் இந்த வசதி வந்துள்ளது’ என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →