தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகத் துறை மறுசீரமைக்கப்பட்டுள்ளது: அா்விந்தா் சிங் லவ்லி
புது தில்லி: மக்களவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அதன் சமூக ஊடகத் துறையை மறுசீரமைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி திங்கள்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகத் துறை, கட்சியின் தில்லி பிரதேசதிற்கான சமூக ஊடகத் துறையை மறுசீரமைத்துள்ளது.
மக்களவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகத் துறையை வலுப்படுத்த, முகமது ஹெதயதுல்லா தலைமையில் 114 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள 7 பாஜக எம்.பி.க்களின் செயலற்ற தன்மை, திறமையின்மை, மற்றும் முட்டுக்கட்டையான வளா்ச்சிப் பணிகள் ஆகியவற்றின் அடிப்படை யதாா்த்தத்தை சமூக ஊடங்கங்கள் வாயிலாகவும் காங்கிரஸ் தில்லி மக்களிடம் எடுத்துச் செல்லவுள்ளது.
Advertisement
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி அவரது ’பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்’ போது வாக்குறுதியளித்த ஐந்து உத்தரவாதங்களைப் பற்றி கட்சியின் சமூக ஊடகத் துறை மக்களிடையே பரப்புரை செய்யும். மத்திய பாஜக அரசின் கடந்த 10 ஆண்டுகால தவறான ஆட்சியால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனா். ஆனால், பாஜக பொய்களைப் பரப்பி வருகிறது என்றாா் அரவிந்த் கேஜரிவால்.