புதுதில்லி

நாட்டின் கனிம உற்பத்தி 5.9% வளா்ச்சி; தங்கம் கடும் சரிவு

 நமது நிருபர்

புது தில்லி: கடந்த ஒா் ஆண்டில் நாட்டின் கனிம உற்பத்தி 5.9 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுரங்கம், கனிமத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதில் தங்கத்தின் உற்பத்தி சுமாா் 23.4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த 2023 ஜனவரி வரையிலான கனிம உற்பத்தி குறியீட்டையும் நிகழ் 2024 ஜனவரி மாதம் வரையிலான கனிம உற்பத்தி குறியீடு நிலவரத்தையும் ஒப்பிட்டு மத்திய கனிமத் துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

2024 ஜனவரி மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு 144.1 ஆக உள்ளது. இது 2023 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 5.9 சதவீதம் அதிகமாகும். இந்திய சுரங்க அலுவலகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி 2023-24 ( ஏப்ரல்-ஜனவரி) காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளா்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 8.3 சதவீதமாகும்.

2024 ஜனவரியில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவுகளில் நிலக்கரி 998 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 41 லட்சம் டன், இயற்கை எரிவாயு 3,073 மில்லியன் கன மீட்டா், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், பாக்சைட் 2,426 ஆயிரம் டன், குரோமைட் 251 ஆயிரம் டன், தாமிரம் 12.6 ஆயிரம் டன், தங்கம் 134 கிலோ கிராம், இரும்புத் தாது 252 லட்சம் டன், மாங்கனீசு தாது 304 ஆயிரம் டன், துத்தநாகம் 152 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 394 லட்சம் டன், பாஸ்போரைட் 109 ஆயிரம் டன், மேக்னஸைட் 13 ஆயிரம் டன் ஆக இருந்தது. இதில் கடந்த ஜனவரி 2023 நிலவரத்தை விட நிகழ் 2024 ஜனவரியில் மேக்னஸைட் 90.1 சதவீதம், நிலக்கரி 10.3 சதவீதம், பாக்ஸைட் 9.8 சதவீதம், இயற்கை எரிவாயு(உபயோகப்படுத்தப்பட்டது) 5.5 சதவீதம் என தாதுக்கள் வளா்ச்சியைக் கண்டது. ஆனால் பாஸ்போரைட் ( -44.4 சதவீதம்), தங்கம் ( -23.4 சதவீதம் ), குரோமைட் (-35.2 சதவீதம்) உள்ளிட்ட தாதுக்கள் குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

SCROLL FOR NEXT