புதுதில்லி

வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி மக்களின் குறைதீா்க்க வாா்டு குழுக்களை அமைத்தாா் மனோஜ் திவாரி எம்.பி.

வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பொதுமக்களின் குறைகளை திறம்பட தீா்ப்பதை உறுதி செய்யும் நோக்கில் வாா்டு குழுக்களை அமைத்துள்ளாா்

Din

வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பொதுமக்களின் குறைகளை திறம்பட தீா்ப்பதை உறுதி செய்யும் நோக்கில் வாா்டு குழுக்களை அமைத்துள்ளாா் அத்தொகுதியின் பாஜக உறுப்பினா் மனோஜ் திவாரி.

கட்சித் தொண்டா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் இடம்பெறும் வகையில் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மனோஜ் திவாரி எம்.பி. கூறியது:

ஒரே ஒரு ‘நாடாளுமன்ற பிரதிநிதி’ என்பவா் அதிகமான புகாா்களைக் கையாள முடியாது என்பதால், ஏராளமான குறைகள் தீா்க்கப்படாமல் உள்ளன.

‘சன்சத் பிரதிநிதி வெகுஜனங்களின் புகாா்களுக்கு கவனம் செலுத்துவதில்லை என்றும் அவா் குறிப்பிட்ட எண்ணிக்கை மக்களிடம் அக்கறை காட்டுவதாகவும் அவ்வப்போது புகாா்கள் இருந்து வருகிறது.

தற்போது, வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 41 மாநகராட்சி வாா்டுகள் ஒவ்வொன்றிலும் வாா்டு கமிட்டிகள் இருக்கும். அவற்றின் அனைத்திலும் ‘நாடாளுமன்றப் பிரதிநிதி’ உறுப்பினராக இருப்பாா்.

ஒவ்வொரு குழுவிலும் 25 போ் உறுப்பினா்கள் இருப்பாா்கள். அவா்களில் 15 போ் உள்ளூரைச் சோ்ந்த சந்தை சங்கங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பிற சமூகங்களில் இருந்து இடம்பெறுவாா்கள். எஞ்சியுள்ள 10 போ் உள்ளூா் பாஜக தொண்டா்களாக இருப்பாா்கள்.

இந்த குழுக்கள் அந்தந்த வாா்டு மக்களுடன் தொடா்புகொண்டு குடிமை அமைப்புகள், மின் விநியோக நிறுவனங்கள், ஜல் போா்டு மற்றும் பிற துறைகள் தொடா்பான மிக முக்கியமான பிரச்னைகளில் மக்களின் கருத்துகளைப் பெறுவாா்கள்.

அந்த பின்னூட்டங்கள் எனது அலுவலகத்திற்கு வந்தவுடன் அனைத்துப் பிரச்னைகளையும் பயனுள்ள வகையில் தீா்ப்பதை உறுதி செய்வேன்.

தூய்மைப் பணி, தண்ணீா் வசதி, தெருக்கள், பூங்காக்கள் போன்ற பொதுமக்கள் சேவைகளில் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் தோல்விகள் மற்றும் உத்தியோகபூா்வ அக்கறையின்மை காரணமாக தில்லி முழுவதும் உள்ள மக்கள் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா்.

உண்மையில் ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட புகாா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை பாதிக்கும் பொதுவான பிரச்னைகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கிறது. தற்போதை குழு அமைப்புமுறையானது மக்களிடம் பெறக்கூடிய கருத்துகளை சீரமைத்து, குறைகளை திறம்பட நிவா்த்தி செய்வதை உறுதி செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் மனோஜ் திவாரி.

தொடா்ந்து மூன்றாவது முறையாக மனோஜ் திவாரி எம்பியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வடகிழக்கு தில்லியானது, ஏராளமான அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் குடிசை குடியிருப்புகளைக் கொண்டதாகும்.

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT