கடந்த ஆண்டை விட நிகழாண்டு டெங்கு பாதிப்பு 94 சதவீதம் குறைந்துள்ளதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தெரிவித்துள்ளது.
என்டிஎம்சி தரவுகளின்படி, தேசிய தலைநகரில் நிகழாண்டு ஆகஸ்ட் 29 வரை ஏழு டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 131 ஆக இருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 வரை ஒரே ஒரு சிக்குன்குனியா பாதிப்பு இருந்தது.
இதேபோல், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 வரை ஒரு மலேரியா பாதிப்பும், நிகழாண்டு ஒரு வழக்கும் பதிவாகியுள்ளன.
என்டிஎம்சி நிகழாண்டு கொசு உற்பத்தி கண்டறியப்பட்ட இடங்களுக்காக 1,679 நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 104 அபராத சலான்கள் வழங்கப்பட்டுள்ளன என அந்த புள்ளிவிவரத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.