மனீஷ் சிசோடியாவின் அழுதத்தால்தான் அரவிந்த் கேஜரிவால் விரும்பியவரை முதல்வராக தேர்வு செய்ய முடியவில்லை என்று தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேலும், அரவிந்த் கேஜரிவால் விருப்பமின்றிதான் அதிஷியை முதல்வராக தேர்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கிடைத்து சிறையில் இருந்து வெளிவந்துள்ள அரவிந்த் கேஜரிவால், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் வரும்வரை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர் புதிய முதல்வராக செயல்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
புதிய முதல்வர் அதிஷி
இந்த நிலையில், கேஜரிவால் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அமைச்சர் அதிஷி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிசோடியாவால் மாற்றம்
இதுகுறித்து செய்தியாளர்களுடன் தில்லி பாஜக தலைவர் பேசியதாவது:
விருப்பமின்றி அதிஷியை முதல்வராக்கியுள்ளார் கேஜரிவால். மனீஷ் சிசோடியாவின் அழுத்தம் காரணமாக அவர் விரும்பியவரை முதல்வராக்க முடியவில்லை. சிசோடியாவால்தான் அதிஷிக்கு அனைத்து துறைகளும் கொடுக்கப்பட்டன.
முகம் மாறினாலும், அவர்களின் ஊழல் அப்படியேதான் இருக்கும். இதுகுறித்து தில்லி மக்கள் கேள்வி கேட்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.