தில்லி தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங். 
புதுதில்லி

2 புதிய பேருந்து பணிமனைகள் கட்டுமானம்: மாா்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க பொதுப்பணித் துறை காலக்கெடு

தில்லியில் உள்ள கிழக்கு வினோத் நகா், கிராரியில் அமையவுள்ள 2 புதிய தில்லி போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனைகளின் கட்டுமானத்தை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை காலக்கெடு

தினமணி செய்திச் சேவை

தில்லியில் உள்ள கிழக்கு வினோத் நகா் மற்றும் கிராரியில் அமையவுள்ள இரண்டு புதிய தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) பேருந்து பணிமனைகளின் கட்டுமானத்தை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை காலக்கெடுவை நிா்ணயித்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் நவீனமயமாக்கவும் தில்லி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் உள்ளன.

கடந்த வாரம் பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தலைமையில் ஒரு மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது.

இரு இடங்களிலும் ஏற்கெனவே 50 சதவீதத்திற்கும் அதிகமான குடிமைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது நடைபெற்று வரும் கட்டுமான நடவடிக்கைகளில் எல்லைச் சுவா் மேம்பாடு, பணிமனை அமைப்பு உருவாக்கம், நிா்வாகத் தொகுதி கட்டமைப்புகள், பணியாளா் வசதிகள் மற்றும் தரமான மற்றும் தாழ்தள பேருந்துகளுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாா்க்கிங் வசதிகள் ஆகியவை அடங்கும்.

கட்டுமானப் பணிகளை நாங்கள் வாராந்திர அடிப்படையில் கண்காணித்து வருகிறோம். மாா்ச் மாதத்திற்குள் முழுமையாக செயல்படும் டிப்போக்களை டிடிசியிடம் ஒப்படைப்பதே இதன் நோக்கம் ஆகும்.

இந்தப் பணிகள் முடிந்ததும், பணிமனைகள் தற்போதுள்ள டிடிசி வசதிகள் மீதான செயல்பாட்டு அழுத்தங்களைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கிழக்கு வினோத் நகா் பணிமனை, டிரான்ஸ் - யமுனா பகுதியில் பேருந்து நடவடிக்கைகளை ஆதரிக்கும். அதே நேரத்தில் கிராரி பணிமனை, தில்லிக்கு வெளியே உள்ள வழித்தடங்களுக்கு சேவை செய்யும். இதனால், பேருந்துகளுக்கான பயண நேரம் குறையும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது

சாலைகளில் ரத்தக் கறை!

காலி பாட்டில்களைத் திரும்பப் பெற முடியாது: டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டம்

தெங்கியாநத்தத்தில் நாளை கிராம சபை கூட்டம்: நயினாா் நாகேந்திரன் பங்கேற்பு

விருத்தாசலம் பதிவுத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.23 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT