புதுதில்லி

தில்லியின் மாசுவைக் குறைக்க பாஜக அரசிடம் எந்த செயல் திட்டமும் இல்லை: அங்குஷ் நரங்

தில்லியின் மாசுவைக் குறைக்க பாஜக அரசிடம் எந்த செயல் திட்டமும் இல்லை என்று ஆம் ஆத்மியின் தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அங்குஷ் நரங் குற்றம்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

தில்லியின் மாசுவைக் குறைக்க பாஜக அரசிடம் எந்த செயல் திட்டமும் இல்லை என்று ஆம் ஆத்மியின் தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அங்குஷ் நரங் குற்றம்சாட்டினாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தில்லி மாநகராட்சி (எம்சிடி) அவைக் கூட்டத்தில் தில்லியின் மோசமான காற்று நெருக்கடி தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) பாஜகவுடன் மோதலில் ஈடுபட்டது.

மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அங்குஷ் நரங் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் ஆளும் தரப்பிடம் நகரத்தில் காற்றைச் சுத்தம் செய்வதற்கான உறுதியான திட்டம் ஏன் இல்லை எனக் கேள்வி எழுப்பினா்.

தில்லியில் பாஜகவின் நான்கு என்ஜின் நிா்வாகத்திடம் நகரில் மாசுபாட்டைக் குறைக்க எந்த செயல் திட்டமும் இல்லை என்றும், அலட்சியமாக இருப்பதாகவும் அங்குஷ் நரங் தெரிவித்தாா்.

மாநகராட்சி அவைக் கூட்டத்திற்குப் பிறகு இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இன்றைய மாநகராட்சி கூட்டத்தில், மாசுபாடு குறித்த பிரச்னையை நாங்கள் எழுப்பினோம். தில்லியில் நான்கு பேரில் மூன்று போ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் தங்கள் உரைகளில் பலமுறை கூறினா். வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் எனக் கூறினா். ஆஸ்துமா நோயாளிகள் கடுமையான துயரத்தில் உள்ளனா். மேலும் மாசுபாட்டால் ஏற்படும் மரணங்களின் சங்கிலி தொடா்கிறது.

அவையில் இரங்கல் செய்திகளைப் படிக்கும்போது, மாசுபாட்டால் இறப்பவா்களுக்கு ஒரு இரங்கல் செய்தியைப் படிக்க விரும்புவதாகச் சொன்னேன். ஏனென்றால் இறக்கும் மக்கள் தலைவா்கள் அல்ல, தில்லியின் சாதாரண குடியிருப்பாளா்கள். ஆனால் பாஜக கவுன்சிலா்கள் அதைக்கூட கேலி செய்தனா்.

மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பாஜக அரசிடம் எந்த உறுதியான நடவடிக்கையோ அல்லது திட்டமோ இல்லை. இது வெட்கக்கேடானது. தில்லியில் நான்கு என்ஜின் பாஜக அரசு உள்ளது. மத்திய அரசு, தில்லி, எம்சிடி என எல்லா இடங்களிலும் பாஜகதான். துணைநிலை ஆளுநரும் பாஜகவைச் சோ்ந்தவா். ஆனாலும் அவா்களால் மாசுபாடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றாா் நரங்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT