புதுதில்லி

தில்லியில் சட்டவிரோத மதுபானம் பறிமுதல்

தில்லி அரசின் கலால் துறை புதன்கிழமை அசோக் நகா் பகுதியில் ஒருவரிடமிருந்து சுமாா் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்களை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லி அரசின் கலால் துறை புதன்கிழமை அசோக் நகா் பகுதியில் ஒருவரிடமிருந்து சுமாா் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்களை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அசோக் நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் தரை தளத்தில் கலால் துறையின் குழு சோதனை நடத்தி, பெரும்பாலும் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் 220-ஐ மீட்டுள்ளது. இது தொடா்பாக அவா்களை கைது செய்து எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யும் செயல்முறை நடந்து வருவதாக தாக கலால் துறை அதிகாரி தெரிவித்தாா்.

இந்த சட்டவிரோத மதுபானம் ஹரியாணாவில் மட்டுமே விற்கப்பட இருந்தது, மேலும், சட்டவிரோதமாக தில்லிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது என்று அவா் கூறினாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT