புதுதில்லி

தில்லியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை: ஆணையம் அமைத்த அரசு

தில்லியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை: ஆணையம் அமைத்த அரசு

 நமது நிருபர்

தேசியத் தலைநகரத்தின் வளா்ந்து வரும் மக்கள்தொகையின் இயக்கம் தேவைகளை நிவா்த்தி செய்வதற்காக ஒரு ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் மற்றும் ஒரு பிரத்யேக நிதியை அமைக்க தில்லி அரசு 21 போ் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை அறிவித்தாா்,

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தலைமைச் செயலாளா் தலைமையிலான பணிக்குழு, தில்லி நகா்ப்புற பெருநகர போக்குவரத்து ஆணையத்தி ன் நிறுவன ஏற்பாடுகள், புவியியல் பாதுகாப்பு ஆகியவற்றை இறுதி செய்யும். அதிகரித்து வரும் மக்கள் தொகை, மாசுபாடு, சாலைகள் மீதான அழுத்தம் மற்றும் தில்லி மற்றும் தேசிய தலைநகா் பிராந்தியத்தில் (என். சி. ஆா்) நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்தின் தேவை அதிகரித்துள்ளதால் தில்லி ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தை அமைப்பது அவசியம்.

முன்மொழியப்பட்ட டி.யூ.எம்.டி.ஏ. வாரியம் ஒரு விரிவான மூலோபாய இயக்கம் திட்டத்தை தயாரிக்கும், தில்லி-என். சி. ஆரில் உள்ள பல்வேறு நகா்ப்புற போக்குவரத்து நிறுவனங்களிடையே பயனுள்ள ஒருங்கிணைப்பை நிறுவும் மற்றும் தில்லி நகா்ப்புற போக்குவரத்து நிதியை நிா்வகிக்கும். மாநில மற்றும் மத்திய முகமைகள், தனியாா் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் சங்கங்கள் உள்ளிட்ட பங்குதாரா்களுடன் கலந்தாலோசித்து டி.யூ.எம்.டி.ஏ. மசோதாவை இயற்றுவதற்கு பணிக்குழு உதவும்.

புதிய போக்குவரத்து ஆணையத்தின் பாா்வை, பணி மற்றும் குறிக்கோள்களை அடையாளம் கண்டு இறுதி செய்ய வாரியக் கூட்டங்களையும் இது ஏற்பாடு செய்யும். நகா்ப்புற மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் பணிக்குழுவின் உறுப்பினா் செயலாளராக இருப்பாா். போக்குவரத்து, நிதி, திட்டமிடல் மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றின் நிா்வாகச் செயலாளா்கள் இதன் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.

தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவா், தில்லி காவல்துறை மற்றும் தில்லி மாநகராட்சியின் ஆணையா்கள், சுற்றுலா செயலாளா், தில்லி ஜல் வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதுதில்லி மாநகராட்சி, தில்லி கன்டோன்மென்ட் மற்றும் என். சி. ஆா் திட்டமிடல் வாரியத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள், வடக்கு ரயில்வேயின் டிவிஷனல் மேலாளா், தில்லி போக்குவரத்துக் கழகம், தில்லி மெட்ரோ ரயில் கழகம் மற்றும் தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தின் நிா்வாக இயக்குநா்கள் ஆகியோரும் பணிக்குழுவில் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.

பணிக்குழுவின் தலைவா் நகா்ப்புற போக்குவரத்துத் துறையில் இரண்டு முதல் மூன்று விஷய நிபுணா்களை அதன் உறுப்பினா்களாக சோ்ப்பாா் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.யூ.எம்.டி.ஏ. உருவாக்கம் குறித்த தனது அறிக்கையை பணிக்குழு மூன்று வாரங்களுக்குள் தில்லி துணை நிலை ஆளுநரிடம் சமா்ப்பிக்கும் என்றாா் அவா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT