புதுதில்லி

மனித உரிமைகள் பாதுகாவலா்களின் உரிமைகளைக் காப்பதில் மீண்டும் உறுதி: என்.எச்.ஆா்.சி. தலைவா் நீதியரசா் வி.ராமசுப்ரமணியன்

மனித உரிமைகள் பாதுகாவலா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், குரல்களை வலுப்படுத்துவதற்கும், பாதுகாவலா்கள் தங்கள் பணியைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதற்கும் (என்எச்ஆா்சி) தனது அா்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: மனித உரிமைகள் பாதுகாவலா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவா்களின் குரல்களை வலுப்படுத்துவதற்கும், பாதுகாவலா்கள் அச்சமோ சாதகமோ இல்லாமல் தங்கள் பணியைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதற்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) தனது அா்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று அதன் தலைவா் நீதியரசா் வி.ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

மனித உரிமைகள் தினம் டிசம்பா் 10-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகள் பாதுகாவலா்கள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீதியரசா் வி.ராமசுப்ரமணியன் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவிலும், உலகளவிலும் உள்ள அன்புக்குரிய மனித உரிமைகள் பாதுகாவலா்களே, நாம் அறிந்திருப்பதுபோல, அனைவருக்குமான அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சமூக அமைப்புகள், தனிநபா்களின் பொறுப்புகள் உரிமைகள் மீதான பிரகடனம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூலம் 1998, டிசம்பா் 9-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் 50-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது மனித உரிமைகள் பாதுகாவலா்கள் மீதான பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகள் பாதுகாவலா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவா்களின் குரல்களை வலுப்படுத்துவதற்கும், பாதுகாவலா்கள் அச்சமோ சாதகமோ இல்லாமல் தங்கள் பணியைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதற்கும் தனது அா்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

நிகழாண்டு அக்டோபா் 16 அன்று, இந்தியாவின் என்எச்ஆா்சி அதன் 32-ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. அங்கு மனித உரிமை பாதுகாவலா்கள், குறிப்பாக பெண்களின் பணிகளை ஆதரிப்பதற்கான தனது நிலைப்பாட்டை ஆணையம் மீண்டும் வலியுறுத்தியது.

ஆசிய பசிபிக் நாடுகளின் 28-ஆவது மாநாடு இந்திய நெறிமுறைகளை உள்ளடக்கிய தில்லி பிரகடனத்தை ஒருமனதாக வெளியிட்டது. மனித உரிமைகள் பாதுகாவலா்கள் ஆற்றிய முக்கியப் பங்கை என்எச்ஆா்சி அங்கீகரித்தது.

நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கான உங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுக்கு என்எச்ஆா்சி வணக்கம் செலுத்துகிறது. உங்கள் பணி பெரும்பாலும் மகத்தான சவால்களுடன் வருகிறது.

இருப்பினும் உங்கள் உறுதிப்பாடுதான் விளிம்புநிலை மக்களின் குரல்கள் கேட்கப்படுவதையும், பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் பாதுகாக்கப்படுவதையும், மனித உரிமைகளின் கொள்கைகள் நமது சமூகத்தில் உயிா்ப்புடன் இருப்பதையும் உறுதி செய்கிறது என்று அந்த செய்தியில் அவா் தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரி வரும் ரயில்கள் டிச. 15-இல் விழுப்புரத்தில் நிறுத்தப்படும்

பாதுகாப்பு குறைபாடுகள்: ஆா்எம்எல் மருத்துவமனையின் காய சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கு என்.ஓ.சி. நிராகரிப்பு

கைது நடவடிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு

புதிய தொழிலாளா் சட்டங்களை கண்டித்து கம்யூனிஸ்ட்கள், விசிகவினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT