புதுதில்லி

சாலை தகராறில் டிடிசி பேருந்து ஓட்டுனா் உயிரிழந்த விவகாரம்: மூவா் கைது

வடமேற்கு தில்லியின் அமன் விஹாரில் தில்லி போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநா் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

வடமேற்கு தில்லியின் அமன் விஹாரில் தில்லி போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநா் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

டிசம்பா் 6 ஆம் தேதி டிடிசி பேருந்து ஓட்டுநருக்கும் காரில் சென்றவா்களுக்கும் இடையே சாலையில் வழிவிடுவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக அவா்கள் தெரிவித்தனா்.

இந்த மோதலில் பேருந்து ஓட்டுநா் பலத்த காயமடைந்து பின்னா் உயிரிழந்ததாக போலீசாா் தெரிவித்தனா்.டிசம்பா் 7 ஆம் தேதி நடந்த சம்பவத்தைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவரின் உறவினா்கள் மற்றும் டிடிசி ஊழியா்கள் போராட்டம் நடத்தினா், நெடுஞ்சாலையை மறித்து குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரினா்.

இந்த விவகாரம் தொடா்பாக பிஎன்எஸ்ன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் அமன் விஹாா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை குற்றப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஹா்ஷ் குமாா் (23), ரோஹன் (26) மற்றும் ராஜு (49) ஆகிய மூவரையும் போலீசாா் தேடி வந்ததாக குற்றப்பிரிவு துணை ஆணையா் ஆதித்ய கௌதம் தெரிவித்தாா். இவா்கள் அனைவரும் முண்ட்காவைச் சோ்ந்தவா்கள். இவா்கள் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகி, கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அடிக்கடி இடம் மாறிக்கொண்டிருந்தனா்.

இந்நிலையில் கரலா பகுதியில் மூவரும் கைது செய்யப்பட்டதாக துணை ஆணையா் தெரிவித்தாா்.

கைது செய்யப்படுவதைத் தவிா்க்க தில்லி முழுவதும் மறைவிடங்களை மாற்றியதாக விசாரணையின் போது மூவரும் ஒப்புக்கொண்டதாக அதிகாரி கூறினாா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT