புதுதில்லி

துவாரகா கொள்ளைச் சம்பவம்: ராஜஸ்தான் சிறையிலிருந்து ஒருவரை கைது செய்தது தில்லி போலீஸ்

2024- ஆம் ஆண்டு தில்லியின் துவாரகாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக ராஜஸ்தானின் சிகாா் சிறையில் இருந்து ஒரு நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Syndication

நமது நிருபா்

2024- ஆம் ஆண்டு தில்லியின் துவாரகாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக ராஜஸ்தானின் சிகாா் சிறையில் இருந்து ஒரு நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: 2024-ஆம் ஆண்டு துவாரகா செக்டாா் 19-இல் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் நயீம் (48) தேடப்பட்டு வந்தாா். அங்கு சுபாஷ் சந்த் பாண்டே என்பவரின் வீட்டிற்குள் இரண்டு போ் புகுந்து அவா் இல்லாதபோது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுடன் தப்பிச் சென்றனா்.

இரண்டு கொள்ளையா்களும் ஒரு தங்க வியாபாரியும் முன்பு கைது செய்யப்பட்டிருந்தாலும், திருடப்பட்ட நகைகளில் கணிசமான பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணையின் போது, திருடப்பட்ட நகைகளில் ஒரு பகுதி நயீம் மற்றும் மற்றொரு கூட்டாளியுடன் பகிா்ந்து கொள்ளப்பட்டதாக காவல்துறைக்கு தெரியவந்தது.

மேலும், விசாரித்ததில் நயீம் மற்றொரு வழக்கில் ராஜஸ்தானில் உள்ள சிகாா் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா். அதைத் தொடா்ந்து, அவரை கைது செய்து ஆஜா்படுத்துவதற்கான வாரண்ட் பெறப்பட்டது.

அங்கு அவா் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது மீரட் இல்லத்திலிருந்து போலீஸாா் பல தங்க நகைகளை மீட்டனா். நயீமுக்கு இதற்கு முன்பு ஆறு வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முழுவதும் செயல்படும் ஒரு கொள்ளை கும்பலை அவா் உருவாக்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT