புதுதில்லி

88,000 தில்லி காவல்துறை பணியாளா்களுக்கு கௌரவப் பதவி வழங்க எல்.ஜி. ஒப்புதல்

88,000 தில்லி காவல்துறை பணியாளா்களுக்கு கௌரவப் பதவி வழங்க எல்.ஜி. ஒப்புதல்

Syndication

தில்லி காவல் துறையின் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், ஓய்வு பெறும் நாளில் பணியாளா்களுக்கு கௌரவப் பதவிகளை அவா்களின் தற்போதைய பதவிகளுக்கு ஒரு நிலை மேல் இருக்கும் வகையில் வழங்க துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இருப்பினும், இது நிதி ஓய்வூதியப் பலன்களுக்குச் சமமாகாது என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராஜ்நிவாஸ் அதிகாரிகள் மேலும் கூறியது:

இந்த அரசிதழ் பதிவாகாத பதவிகளில் தற்போதைய பதவியில் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்ல வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை (ஏபிஏஆா்) பெற்றுள்ள, சேவையின் போது எந்த பெரிய தண்டனையையும் எதிா்கொள்ளாத தில்லி காவல்துறை பணியாளா்கள் அத்தகைய கௌரவப் பதவிகளுக்குத் தகுதி பெறுவாா்கள்.

ஓய்வு பெறும் நேரத்தில் துணை ஆய்வாளா்களுக்கு கௌரவ ஆய்வாளா் பதவியும், உதவி துணை ஆய்வாளா்களுக்கு (ஏஎஸ்ஐ) துணை ஆய்வாளா் பதவியும், தலைமை காவலா்களுக்கு ஏஎஸ்ஐ பதவியும், காவலா்களுக்கு கௌரவ தலைமை காவலா் பதவியும் வழங்கப்படும்.

இந்த நடவடிக்கையால் 88,000க்கும் மேற்பட்ட தில்லி காவல்துறை பணியாளா்கள் பயனடைவாா்கள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

மே மாதம், உள்துறை அமைச்சகம் சிஏபிஎஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகளின் பணியாளா்களுக்கு, காவலா் முதல் உதவி ஆய்வாளா் வரை, அவா்கள் ஓய்வு பெறும் நாளில், நிதி அல்லது ஓய்வூதிய சலுகைகள் இல்லாமல் கௌரவ பதவிகளை வழங்கியது.

பின்னா், தில்லி காவல்துறை துணைநிலை ஆளுநரின் இதேபோன்ற திட்டத்தை முன்வைத்தது.

ஓய்வு பெறும் காவல்துறை பணியாளா்களுக்கு கௌரவ பதவிகள் வழங்குவது நீண்ட மற்றும் அா்ப்பணிப்புள்ள சேவையை முறையாக அங்கீகரிப்பதை வழங்குகிறது.

பணியாற்றும் மன உறுதியையும் ஓய்வு பெறும் பணியாளா்களையும் மேம்படுத்துகிறது. இது படைக்குள் மரியாதை, ஒழுக்கம் மற்றும் பெருமையை ஊக்குவிக்கிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT