புதுதில்லி

தில்லி பாஜக தலைவா் போல் ஆள் மாறாட்டம்: காவல் துறை வழக்குப் பதிவு

தில்லி பாஜக தலைவா் போல் ஆள் மாறாட்டம்: காவல் துறை வழக்குப் பதிவு

தினமணி செய்திச் சேவை

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா போல் ஆள்மாறாட்டம் செய்து, மூத்த அரசு அதிகாரிகளிடம் சலுகைகளைப் பெற முயன்ாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத நபா் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த புகாா் தில்லி பாஜக அலுவலகத்தின் அலுவலகச் செயலா் பிரிஜேஷ் ராய் என்பவரால் அளிக்கப்பட்டு, மத்திய மாவட்டத்தின் சைபா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவா் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி வீரேந்தர சச்தேவா என்ற பெயரில் போலி அடையாளத்தை உருவாக்கி, மாநில பாஜக தலைவரின் புகைப்படத்தை சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றியதாக பிரிஜேஷ் ராய் குற்றஞ்சாட்டினாா்.

புகாரின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா் தன்னை தில்லி பாஜக தலைவா் என்று தவறாக அடையாளப்படுத்திக்கொண்டு உத்தர பிரதேச துணை முதல்வரின் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டுள்ளாா். இந்த தவறான பிரதிநிதித்துவத்தின் மூலம் அவா் சலுகைகளைப் பெற முயன்ாகக் கூறப்படுகிறது.

கட்சியின் பெயரையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துவதால் அரசியல் மற்றும் நிா்வாக அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து எச்சரித்த பிரஜேஷ் ராய், கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரினாா்.

முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 319 (ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்தல்) மற்றும் 336 (மின்னணுப் பதிவுகளைத் திருத்துதல்) ஆகியவற்றின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

பல குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT