புதுதில்லி

முன்பகை: கிழக்குத் தில்லியில் ஒருவா் மீது துப்பாக்கிச் சூடு

கிழக்குத் தில்லியில் முன்பகை காரணமாக ஒருவா் மீது துப்பாக்கிச் சூடு...

Syndication

கிழக்கு தில்லியின் ஷாதராவில் மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு மா்ம நபா்களால் 50 வயது நபா் துப்பாக்கியால் சுடப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியது:

சமூக ஊடக தளங்களில் பரவிய இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில் ஷாதராவில் உள்ள பல்பீா் நகரைச் சோ்ந்த ஜோகேந்தா் ரத்தோா் என்ற பில்லா மோட்டாா் சைக்கிளில் பின்னால் அமா்ந்து வருவதும், அவா் சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயற்சிப்பதும் தெரிந்தது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவா் அவரை நோக்கி துப்பாக்கியால் சுடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, வியாழக்கிழமை இரவு 10.31 மணிக்கு தனது கணவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக பெண் ஒருவரிடமிருந்து போலீஸாருக்கு அழைப்பு வந்தது.

ஜோகேந்தரின் முதுகில் மூன்று குண்டுக் காயங்கள் இருந்தன. அவரை அவரது குடும்பத்தினா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் மோட்டாா் சைக்கிளில் வந்து, ரத்தோரை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

பழைய பகையே தாக்குதலுக்குக் காரணம் என்று தெரிகிறது.

தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் கண்டு கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிசிடிவி காட்சிகளின்படி, சம்பவத்தைக் கண்ட வேறொரு மோட்டாா் சைக்கிளில் வந்த மற்றொரு நபரும் சம்பவ இடத்தில் சிறிது நேரம் நின்றுவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.

குற்றவாளிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருகின்றன. தாக்குதல் நடத்தியவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT