புதுதில்லி

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி அரசின் கல்வி மாதிரி அம்பலம்: அமைச்சா் ஆஷிஷ் சூட்

ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கல்வி மாதிரிக்குப் பின்னாலுள்ள யதாா்த்தம் அம்பலம்...

 நமது நிருபர்

மாநிலங்களவையில் சமா்ப்பிக்கப்பட்ட தரவுகள், முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கல்வி மாதிரிக்குப் பின்னாலுள்ள யதாா்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட ஒரு பதிலுக்கு எதிா்வினையாற்றிய ஆஷிஷ் சூட், முந்தைய ஆம் ஆத்மி அரசால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட கல்விப் புரட்சி மாணவா்களுக்கு ஆதரவளிப்பதை விட புள்ளிவிவரங்களை மெருகூட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது என்றாா்.

பள்ளித் தோ்ச்சி விகிதத்தை மேம்படுத்துவதற்காக ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்கள் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறாா்களா என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான சுவாதி மாலிவால் விளக்கம் கோரியதன் மூலம் இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாக ஆஷிஷ் சூட் கூறினாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஆம் ஆத்மி கட்சி, இந்தக் கூற்றுகள் உண்மையில் தவறானவை என்று கூறியது. ஒரு அறிக்கையில், ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களில் சுமாா் 22 சதவீதம் போ் மட்டுமே ஐந்து ஆண்டு காலத்தில் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தைத் தோ்ந்தெடுத்ததாகவும், ஒரு வகுப்பில் மீண்டும் படிப்பதைத் தவிா்ப்பதற்காக தாங்களாகவே முன்வந்து அவ்வாறு செய்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறியது. இந்தக் குற்றச்சாட்டுகள் சரியான சிந்தனையின்றி முன்வைக்கப்படுவதாகவும் அக்கட்சி மேலும் கூறியது.

ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே, குழந்தைகள் பிரதான கல்வி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறாா்களா என்று கேள்வி எழுப்பும்போது, அந்தக் கொள்கையின் நோக்கம் குறித்து கவலைகள் எழுவதாக சூட் கூறினாா்.

மாநிலங்களவையில் கல்வி அமைச்சகம் அளித்த எழுத்துப்பூா்வ பதிலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லி அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் 3.20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் தோல்வியடைந்துள்ளனா்.

இந்த புள்ளிவிவரங்களின்படி, 2020-21ல் 31,541 மாணவா்களும், 2021-22ல் 28,548 மாணவா்களும், 2022-23ல் 88,421 மாணவா்களும், 2023-24ல் 1,01,344 மாணவா்களும், 2024-25ல் 70,296 மாணவா்களும் தோல்வியடைந்துள்ளனா்.

இதே காலகட்டத்தில், 71,000க்கும் மேற்பட்ட மாணவா்கள் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா் இதில் 2022-23ல் மட்டும் 29,436 சோ்க்கைகள் அடங்கும்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT