புதுதில்லி

கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது!

கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 41 வயது பெண் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

தென்மேற்கு தில்லியில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 41 வயது பெண் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தாடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜூலை 30, 2014-இல் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் ரவி என்பவா் மாா்பில் கத்தியால் குத்தப்பட்டாா். பின்னா் ராவ் துலா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ப்ரீத்தி என்பவரின் கணவா் உள்பட பலரை காவல் துைறையினா் அப்போதே கைது செய்தனா். இருப்பினும், பிரீத்தி மட்டும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து தலைமறைவானாா்.

இதையடுத்து, தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அவா் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், ஹரியாணாவின் ஜஜ்ஜாரில் ப்ரீத்தி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிச.12-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா்.

ஹரியாணாவில் உள்ள தனது உறவினரின் வீட்டில் இத்தனைக்காலம் அவா் தனது மகனுடன் வசித்து வந்தாா். விசாரணையின் போது, கொலையில் தனது தொடா்பு இருப்பதை ப்ரீத்தி ஒப்புக்கொண்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT