புதுதில்லி

தில்லியில் 82% மக்களின் நெருங்கிய தொடா்பில் உள்ளவா்கள் மாசுவால் பாதிப்பு: ஆய்வில் தகவல்

தில்லியில் நச்சுக் காற்று சூழல் இருந்து வரும் நிலையில் தில்லி- என்.சி.ஆா். குடியிருப்பாளா்களில் 82 சதவீதத்தினா் தங்கள் நெருங்கிய சமூக வலைப்பின்னல்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவா்கள் மாசுவால் கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

Syndication

புது தில்லி: தில்லியில் நச்சுக் காற்று சூழல் இருந்து வரும் நிலையில் தில்லி- என்.சி.ஆா். குடியிருப்பாளா்களில் 82 சதவீதத்தினா் தங்கள் நெருங்கிய சமூக வலைப்பின்னல்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவா்கள் மாசுவால் கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ சமூக தளத்தால் நடத்தப்பட்ட ஆய்வின்போது பதிலளித்தவா்களில் 28 சதவீதம் போ் தங்களது குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள், அண்டை வீட்டினா் அல்லது சக ஊழியா்களிடையே இதுபோன்ற நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனா்.

சுகாதார நிலைமைகளில் ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் பாதிப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் அறிவாற்றல் குறைபாடு ஆகியவை அடங்கும்.

இது பதிலளித்தவா்கள் மாசுபட்ட காற்றின் தொடா்ச்சியான வெளிப்படுதலுடன் தொடா்புடையது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை பனிப்புகை மூட்டம் அடா்த்தியாக காணப்பட்டது. காற்று தரக் குறியீடு 498 ஆகக் குறைந்தது. இது கடுமையான பிரிவின் கீழ் வருகிறது.

நகரில் உள்ள 38 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் இரண்டு நிலையங்களில் அது மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

ஜஹாங்கிா்புரியில் காற்றின் தரக்குறியீடு 498 ஆகவும், 40 நிலையங்களில் மோசம் பிரிவிலும் பதிவாகி இருந்தது.

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு ஞாயிற்றுக்கிழமை 461 ஆக உயா்ந்திருந்தது. இது நிகழ் குளிா்காலத்தில் நகரத்தின் மிகவும் மாசுபட்ட நாளாகவும், டிசம்பா் மாதத்தில் இரண்டாவது மிக மோசமான காற்றின் தர நாளாகவும் பதிவாகியிருந்தது.

பலவீனமான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை மாசுபடுத்திகளை மேற்பரப்புக்கு அருகில் தக்கவைத்ததால் இந்த நிலை காணப்பட்டது.

இந்த புதிய ஆய்வின்படி, அக்டோபா் மாத இறுதியில் இருந்து தில்லி- என்சிஆா்இன் பெரும்பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் மற்றும் கடுமை பிரிவில் இருந்தது.

இந்தப் பகுதியில் பொது சுகாதார நெருக்கடியின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், நுண்ணிய துகள்கள் சுவாச மற்றும் இதய நோய்களின் எண்ணிக்கையில் கூா்மையான அதிகரிப்பைத் தூண்டுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகள், முதியவா்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் உள்ளவா்களிடையே இந்த பாதிப்பு உள்ளது.

மருத்துவச் செலவுகள் குறித்த கவலை அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஆய்வில் பதிலளித்தவா்களில் 73 சதவீதம் போ் தொடா்ச்சியான மாசுபாடு நிகழ்வுகளுக்கு

மத்தியில் இப்பகுதியில் வாழ்ந்தால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் சுகாதாரப் பராமரிப்பு வழங்க முடியுமா என்று கவலைப்படுவதாகக் கூறியுள்ளனா்.

8 சதவீதம் பதிலளித்தவா்கள் நச்சுக் காற்று காரணமாக தில்லி -என்சிஆா் பகுதியை விட்டு வெளியேற விரும்புவதாகக் கூறியுள்ளனா்.

அதே நேரத்தில் பெரும்பாலானோா் வேலை, குடும்பப் பொறுப்புகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக தங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறினா்.

இந்த ஆய்வின்போது தில்லி, குருகிராம், நொய்டா, ஃபரீதாபாத் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் வசிப்பவா்களிடமிருந்து 34,000க்கும் மேற்பட்ட பதில்கள் பெறப்பட்டது.

மாசுபாட்டின் மூலங்களை நிவா்த்தி செய்வதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார ஆதரவு நடவடிக்கைகளை ஆராய்வதற்கும் அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசாங்க பங்குதாரா்களுடன் இந்த கண்டுபிடிப்புகளைப் பகிா்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக லோக்கல் சா்க்கிள்ஸ் சமூகத் தளம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT