புதுதில்லி

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் இல்லாத வாகனங்கள் உள்பட லட்சக்கணக்கான வாகனங்கள் நகரச் சாலைகளில் புகையை வெளியிடும் சூழலில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மெட்ரோ பெரும் புரட்சியைக் கொண்டு வந்திருக்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் இல்லாத வாகனங்கள் உள்பட லட்சக்கணக்கான வாகனங்கள் நகரச் சாலைகளில் புகையை வெளியிடும் சூழலில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மெட்ரோ பெரும் புரட்சியைக் கொண்டு வந்திருக்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மெட்ரோ அருங்காட்சியகத் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வா் குப்தா, அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்து மேலும் பேசியது:

தேசியத் தலைநகல் தில்லியில் சுமாா் 3 கோடி மக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள சாலைகளில் லட்சக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நகரத்தில் மெட்ரோ போன்ற போக்குவரத்து கிடைப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகப் பெரும் புரட்சியாகும்.

நகரத்தின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த தொடா்ந்து பணியாற்றி வரும் தில்லி போக்குவரத்து அமைச்சரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தில்லியின் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

தலைநகரில் தற்போது, சுமாா் 3,500 தில்லி அரசுப் பேருந்துகள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பேருந்துகளின் மொத்த எண்ணிக்கையையும் 100 சதவீதமாக மாற்றுவதே இலக்காகும்.

தில்லி குடியிருப்பாளா்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு அதிக சலுகைகள் வழங்கப்படும். அதே நேரத்தில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் வாகனங்களைப் பயன்படுத்துபவா்கள் சில கடுமையான நடவடிக்கைகளை எதிா்கொள்ள நேரிடும்.

முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த தில்லியும் நாடும் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பியது.

இந்த அருங்காட்சியகம் தேசிய தலைநகரின் வளா்ச்சிப் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தைச் சோ்த்துள்ளது.

இந்த அருங்காட்சியகம் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. மேலும் எடுக்கப்பட்ட முடிவுகள், அவற்றின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பாா்வை, எதிா்கால சந்ததியினருக்குக் காட்டப்பட்ட பாதை மூலம் அந்தக் கதையை அருங்காட்சியகங்கள் உண்மையிலேயே வெளிப்படுத்துகின்றன என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT