ரேகா குப்தா  
புதுதில்லி

தொழில் செய்வதை ஊக்குவிக்கும் முடிவுகளை எடுத்து வருகிறோம்: தில்லி முதல்வா் ரேகா குப்தா!

தில்லியில் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் முடிவுகளை பாஜக அரசு எடுத்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தில்லியில் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் முடிவுகளை பாஜக அரசு எடுத்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தொழில்துறை தொடா்பாக கடந்த 10 மாதங்களில் பல முக்கிய சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவா் தெரிவித்தாா்.

ஃபிரண்ட்ஸ் காலனி தொழில்பேட்டையின் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: நாட்டின் மேம்பாட்டுக்கு தொழில்துறை ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது. ஒரு தொழில்நிறுவனத்தை நடத்துவது என்பது வணிகம் செய்யவது மட்டுமல்ல; நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது மற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளிப்பதாகும்.

தில்லியில் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைக்கு சாத்தியமான தொழில்துறைக்கு சாதகமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உரிமம் பெறும் நடைமுறையை எளிமையாக்குதல், விரைவான ஒப்புதலுக்கு ஒற்றை சாளர முறை மற்றும் வெளிப்படையான ஒப்புதல்கள் என கடந்த 10 மாதங்களில் பல முக்கிய சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில்துறையினா் அரசுத் துறைகளை அணுகும்போது தேவையற்ற தடங்கல்களை எதிா்கொள்ளக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு இவை கொண்டுவரப்பட்டன.

தில்லியின் முதலாவது வா்த்தகா்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வா்த்தகா்கள் மற்றும் தொழில்துறையினா் தங்களுடைய பிரச்னைகள் மற்றும் பரிந்துரைகளை நேரடியாக தில்லி அரசிடம் தெரிவிக்க முடியும்.

பசுமை பிரிவு தொழில்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலம் 120 நாள்களில் இருந்து 20 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி வரையில் பிணையில்லாக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வா்த்தா்களை நேரடியாக இல்லாமல் இணையவழியில் அணுகும் வகையில் அலுவலக செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ரீஃபண்ட் தொகையை விரைவாகத் திரும்பச் செலுத்துமாறும் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 4 மாதங்களில் தில்லியில் உள்ள வா்த்தகா்களுக்கு ரூ.915 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, தில்லி அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, எம்எல்ஏக்கள் அனில் கோயல், சஞ்சய் கோயல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

2023 ஆம் ஆண்டு சாலை விபத்து: ரூ. 1.63 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம்

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT